மேலும் அறிய
மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
வேளாண்மை அலுவலர் கோமதி, துணை வேளாண்மை அலுவலர் மாறன், கண்காணிப்பாளர் சாந்தி, உள்ளிட்ட 14 நபர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு
![மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு Thiruvarur: Anti-bribery case against 14 government employees for selling subsidized seeds to traders மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/4384fd8a42763d40decf77e56d1673ff_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ride_01
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த இரண்டு மாத காலமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 4ஆம் தேதி திருவாரூர் நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டத்தில் போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிகள் தனியாரிடம் விற்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து விவசாயிகள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கொடுத்ததின் பெயரில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 13 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்
![மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/57887818ccaa476878dcc8912980e5e1_original.jpg)
அப்பொழுது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 வேளாண்மை துறை ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினர் அனைவரிடமும் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 23 லட்சத்து 42 ஆயிரத்து 150 ரூபாய் பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் மீது மீது வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 8 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உளுந்து மற்றும் விதை நெல்லை தனியார் வியாபாரிகளுக்கு வலங்கைமான் வேளாண் துறை அதிகாரிகள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த தனியார் வியாபாரியிடம் உளுந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று திருவிடைமருதூர் தனியார் நெல் வியாபாரியிடம் விதை நெல் விற்பனை செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![மானியத்திற்கு வந்த விதைகள் வியாபாரிகளுக்கு விற்பனை - அரசு ஊழியர்கள் 14 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/65ea12fb18ca7541d42a02c7d6b1f73f_original.jpg)
அதுமட்டுமின்றி இதற்கு உடந்தையாக இருந்த வேளாண்மை அலுவலர் கோமதி, துணை வேளாண்மை அலுவலர் மாறன், கண்காணிப்பாளர் சாந்தி, ஆவூர் விதைநெல் அலுவலக மேலாளர் தியாகராஜன், ஆலங்குடி விதைநெல் அலுவலக மேலாளர் ஆறுமுகம், உள்ளிட்ட 14 நபர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வேளாண் துறை அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மாவட்டம் முழுவதும் எந்தெந்த இடங்களில் இதே போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion