மேலும் அறிய
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனா கால சிறப்பு நிதி வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாதிரி படம்
கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு, உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் நல வாரியத்தில் புதிதாக பதிவு செய்தவர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு நிவாரண நிதி வழங்கப்படுகிறது. தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்ட 6,180 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க ரூ.1.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















