மயிலாடுதுறையில் ஒப்பாரி வைத்து போராடிய பெண்கள் - ஆட்சியர் கண்டுகொள்ளவில்லை என புகார்
’’நான்கு வழிச்சாலை பணிகளுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என புகார்’’
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை NH45 A நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் பொறையார் வரை நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறன. இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் அப்பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களும், விளைநிலங்களை இழந்த விவசாயிகளும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி தமிழ் வழி தேர்வு: எதிர்ப்பு தெரிவிக்கும் தேர்வர்கள்: காரணம் இது தான்!
இந்த சூழலில் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலை ஒப்பந்த நிறுவனமான வில்ஸ்பன் நிறுவன அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தரங்கம்பாடி, செம்பனார்கோயில் மற்றும் சீர்காழி ஒன்றிய குழுக்கள் சார்பில் 21 ஆம்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு வழி சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், கோயில் இடத்தில் குடியிருப்பவர்களுக்கும், விவசாயம் செய்பவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இரவு பகலாக அங்கேயே தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
Watch Video: "என்னிடம் இருந்து இதுதான் எதிர்ப்பார்க்கப்படுகிறது” - ராகுல் ஓபன் டாக்!
6 நாட்களை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் வரவில்லை என கூறி, மாவட்ட ஆட்சியரை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினர். அந்த நூதன போராட்டத்தில் விவசாயி ஒருவரை படுக்க வைத்து மாலை அணிவித்து, மலர்வளையம் வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர். நேற்று தரங்கம்பாடி வருகை தந்த மாவட்ட ஆட்சியர் லலிதா போராட்டக்காரர்களை கண்டுகொள்ளாமல் மாற்று பாதையில் சென்றதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 28 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 8 ஆம் நாள் காத்திருப்பு போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுத்தி 7வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஆப்போ புத்தாண்டு அறிமுகம் Reno7: ரெட் வெல்வெட் நிறத்தில் அசத்தல் ஃபீச்சர்ஸ்!
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்