Watch Video: "என்னிடம் இருந்து இதுதான் எதிர்ப்பார்க்கப்படுகிறது” - ராகுல் ஓபன் டாக்!
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த ராகுல், ஆசியாவிற்கு வெளியே அதிகம் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்கைத் தொடங்கிய கே.எல்.ராகுலும்- மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர்.
அதனை தொடர்ந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களுடன் களத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்தில் 122 ரன்களை குவித்துள்ளார். அதில் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸர்களும் அடங்கும். ’செஞ்சூரியனில் செஞ்சுரி அடித்த வீரர்’ என ரசிகர்கள் ராகுலின் சதத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த சதத்தின் மூலம் அவர் பல சாதனைகைகளை படைத்துள்ளார். முதலில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தான் விளையாடிய அனைத்து நாடுகளிலும் தற்போது வரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை ராகுல் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் இதுவரை 7 சதம் அடித்துள்ளார். அவற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என அனைத்து நாடுகளிலும் இவர் சதம் கடந்து அசத்தியுள்ளார். இதைபோல் ஆசியாவிற்கு வெளியே அதிகம் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலிலும் இவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டிக்கு முன்பு, சதம் கடந்த துணை கேப்டனுடன் பேசி இருக்கும் பிசிசிஐ, வீடியோ நேர்காணலை வெளியிட்டுள்ளது. "ஒவ்வொரு முறை சதம் அடிக்கும்போது, அது ஒரு சிறப்பான அனுபவத்தை தரும். கிட்டத்தட்ட 6-7 மணி நேரம் களத்தில் நின்று ஒரு சிறப்பான இன்னிங்ஸை விளையாடும்போது மனநிறைவாக இருக்கும். இதுதான் என்னிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிறப்பான தொடக்கம் கிடைத்தவுடன் எதை பற்றியும் யோசிக்காமல், விளையாடி கொண்டிருந்தேன். முதல் நாள் ஆட்டத்தை சிறப்பாக முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி” என தெரிவித்திருக்கிறார்.
வீடியோவை காண:
Car conversations with 'Centurion' @klrahul11 🚗 🗣️
— BCCI (@BCCI) December 27, 2021
From emotions on scoring ton 💯 to forming partnerships 🤜🤛 & batting mindset 👍.
The #TeamIndia opener discusses it all after Day 1 of the 1st #SAvIND Test. 👏 - By @28anand
Full interview 🎥 🔽https://t.co/d2DooNWtrG pic.twitter.com/Y0ONWu5vQ3
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்