Watch Video| வாக்குறுதியை நிறைவேற்றிய எம்.எல்.ஏ - 6 கி.மீ தூரம் அரசு பேருந்தை ஓட்டி அசத்தல்
’’பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் அதே பேருந்தில் ஏறி திருவிடைக்கழியில் இருந்து சங்கரன்பந்தல் வரை 6 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டி சென்று அசத்தினார்’’
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைகழியில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்று வந்த அரசு நகரபேருந்து சேவை கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இன்ன பிற பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தினை சந்தித்து வந்தனர்.
Toyota Hilux | டொயோட்டா அறிமுகப்படுத்தும் புதிய பிக்கப் ட்ரக் `ஹிலக்ஸ்’.. இந்த மாடலில் என்ன ஸ்பெஷல்?
இந்நிலையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகனிடம் அக்கிராம மக்கள் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து தேர்தலில் வெற்றி பெற்றால் நிச்சயமாக நின்று போன அரசு பேருந்து சேவை மீண்டும் செயல்படுத்துப்படும் என உறுதி அளித்திருந்தார்.
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவிடைக்கழி-மயிலாடுதுறை இடையே பேருந்து சேவையை தொடங்கிய வைத்த எம்.எல்.ஏ நிவேதா.முருகன், 6 கி.மீ தூரம் பேருந்தை ஓட்டி அசத்தல் @abpnadu pic.twitter.com/Ot0rTBpb7W
— Kathiravan (@kathiravan_vk) January 22, 2022
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா. முருகன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து மயிலாடுதுறை, பெரம்பூர், சங்கரன்பந்தல் வழியாக திருவிடைக்கழி வரை சென்ற A31 என்ற அரசு நகரப்பேருந்தை மீண்டும் தொடங்கி வைத்தார். திருவிடைக்கழியில் இருந்து கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் அதே பேருந்தில் ஏறி திருவிடைக்கழியில் இருந்து சங்கரன்பந்தல் வரை 6 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டி சென்று அசத்தினார்.
மேலும் மயிலாடுதுறை வரை சென்ற பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர். இந்நிகழ்வில் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக வணிகம் துணை மேலாளர் சிதம்பர குமார், கிளை மேலாளர்கள் ராம மூர்த்தி, ஜெயக்குமார் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன் கடந்த சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அவர் தொகுதியில் பேருந்து சேவையை தொடங்கி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பயணிகளுடன் பேருந்தை இயக்கி பயணித்தது குறிப்பிடத்தக்கது.