2026 தேர்தலில் தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம் - டி.டி.வி.தினகரன் திட்டவட்டம்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை . இளைஞர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினருமே இன்றைக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறி வைத்து அவர்கள் மீது விற்பனை செய்யப்படுகிறது . கூலிப்படைகள் அதிகரித்து வருகிறது.
தஞ்சாவூர்: அனைவரின் எதிர்பார்ப்பை போல் வரும் 2026ம் தேர்தலில் தீய சக்தி திமுகவை வீழ்த்தி எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சை அருகே மாரியம்மன்கோயிலில் நடந்த திருமண மண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பெஞ்சால் புயலால் தமிழ்நாடு முழுவதுமே பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை, விழுப்புரம், கிருஷ்ணகிரி சேலம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தஞ்சாவூர் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தெய்வாதீனமாக தஞ்சை மாவட்டம் தப்பித்துக் கொண்டது இருந்தாலும் விவசாயிகளுக்கு, பொதுமக்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அரசாங்கம் மார்தட்டி கொள்ளும் அளவுக்கு அவர்களால் இந்த விஷயத்தை சரியாக கையால முடியவில்லை என்பதுதான் உண்மை. சாத்தனூர் அணையிலிருந்து கவனக்குறைவாக திறந்துவிட்ட காரணத்தினால் தான் தென்பெண்ணை ஆற்றில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது. விழுப்பும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசூர் பக்கத்துல பாலம் அடிச்சிட்டு போயிருக்கு. கடலூர் வரைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிறைய கிராமங்களில் இன்னும் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. உண்ண உணவில்லாமல் உடுத்த துணி இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் செல்லும்போது அவர்கள் மேல் உள்ள கோபத்தை மக்கள் காண்பிக்கின்றனர். மழை பெய்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என்று கூறினர். ஆனால் திருவண்ணாமலை பக்கத்துல 15 கோடியில் கட்டப்பட்ட ஒரு பாலம் 3 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட ஒரு பாலம் இன்றைக்கு இடிஞ்சு போயிருக்கு. இதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம். ஊழல் முறைகேடுகள் நிறைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மத்தியில் வெறுப்பு ஓடுகிறது . பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை . இளைஞர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினருமே இன்றைக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறி வைத்து அவர்கள் மீது விற்பனை செய்யப்படுகிறது . கூலிப்படைகள் அதிகரித்து வருகிறது. கட்டண உயர்வு, வரி உயர்வு என இந்த ஆட்சியில் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்ராஹீமின் ஆட்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல தமிழ்நாட்டில் இன்னைக்கு திராவிட மாடலு ஒரு தவறான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரும் 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக இதற்கு நல்ல முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. ஜனநாயக நாட்டில் யாருக்கும் கட்சி ஆரம்பிக்கிறதுக்கும், தேர்தல்ல பங்கேற்பதற்கும் உரிமை உள்ளது. மக்கள் தான் இதற்கெல்லாம் தீர்ப்பு வழங்கும் எஜமானர்கள் அவர்களுடைய மதிப்பீடு என்ன என்பது.தேர்தலில் தெரியும்.
விவசாயிகளுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது. மழையில் வெள்ளத்தில், புயல் என்று பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டாவை சேர்ந்தவர் என்று சொல்கிற முதலமைச்சர் விவசாயிகளுக்கு இந்த காவேரி படுகை மாவட்டங்களில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு. விவசாயிகளுக்கு போதுமான அளவு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் திராவிட பாடல் ஆட்சியோட உதாரணம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கு இதுதான் உதாரணம். இதுதான் மக்களுடைய மனநிலை. இதைவிட தெளிவாக யாரும் காண்பிக்க முடியாது.
நாளை ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவின் உறுதிமொழி இந்த மக்கள் விரோத ஆட்சியை, இந்த தீய சக்திகள் இருக்கிற ஆட்சியை அகற்றிவிட்டு உண்மையான அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதுதான். துரோகத்தின் பெயரால் அம்மாவின் கட்சியை இன்றைக்கு தீய சக்திகள், துரோக சக்திகள் திமுகவுக்கு விலை போகின்ற தீய சக்திகள் இடம் இருந்து, தீய மனிதர்களிலிருந்து அம்மாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பதற்காக நாங்கள் உறுதி ஏற்கிறோம்.
தொண்டர்களும் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல் இன்றைக்கு விழித்துக் கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். 2026 தேர்தலுக்கு அப்புறம் பழனிச்சாமி அம்மாவின் கட்சிக்கு ,புரட்சித்தலைவர் கண்டெடுத்த கட்சிக்கு முழு விழா நடத்தி விடுவார். புரட்சித்தலைவர் திமுகவுக்கு எதிராக ஆரம்பிச்ச கட்சியை திமுக தேர்தல் வெற்றிக்கு மறைமுகமாக துணை போகிற கட்சியாக எடப்பாடி பழனிச்சாமி தான் செய்த ஊழல்களில் இருந்து தப்பிக்கிறதுக்காக, வழக்குகளில் இருந்து தப்பிக்கிறதுக்காகவோ, கைது நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காகவும், கொலை குற்ற கொள்ளை குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்கிறதுக்காகவும் திமுகவுக்கு மறைமுகமாக கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை
அதானியாக இருந்தாலும் சரி, யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் அது என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு நிலைப்பாடு. கள்ளச்சாராயம் சாவுக்கெல்லாம் 10 லட்சம் அறிவிக்கும் முதல்வர் இந்த மழை பாதிப்பு, புயல் பாதிப்பு நிவாரணத்தை புதுச்சேரி அளவு அளிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் ஆகும்.
20 26 தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்த திமுக என்ற தீய சக்தியை வீழ்த்திவிட்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.