மேலும் அறிய

உச்சி வெயில் நேரத்தில் ஜில்லுன்னு இளநீர் குடிச்சா போல அறிவிப்பு திருச்சி மக்களுக்கு!!!

மிக முக்கியமான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. 

தஞ்சாவூர்: எப்பப்பா அந்த அறிவிப்பு... எப்பப்பா அந்த அறிவிப்பு என்று காத்திருந்த திருச்சி மக்களே... இதோ அறிவிப்பு உங்களுக்காக. திருச்சி விமான நிலையத்திலிருந்து இரண்டு புதிய விமான போக்குவரத்து சேவை தொடங்குது. அதில் முக்கியமாக திருச்சியிலிருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வரும் 30ம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. மற்றொன்று திருச்சி- மும்பை விமான சேவை ஆகும்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமான விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. 

அதிக பயணிகள் வந்து செல்கின்றனர்

மிகப்பெரிய விமான நிலையமாகவும், அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையமாக திருச்சி விளங்குகிறது. இதனால் கூடுதலாக விமான சேவையை இயக்க வேண்டும் என்று பயணிகள் அனைவரும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களின் தொடர் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை வரும் 30-ந் தேதி முதல் தொடங்குகிறது.


உச்சி வெயில் நேரத்தில் ஜில்லுன்னு இளநீர் குடிச்சா போல அறிவிப்பு திருச்சி மக்களுக்கு!!!

யாழ்ப்பாணத்திற்கு திருச்சியிலிருந்து விமான சேவை

இலங்கை தமிழர்களின் முக்கிய வாழ்விடமாக இருந்து வரும் யாழ்ப்பாணத்திற்கு ஏராளமான மக்கள் திருச்சியிலிருந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை இண்டிகோ விமான நிறுவனம் இயக்கி வருகிறது. 

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக விமானங்களை மட்டுமே தரையிறக்க முடியும். இதனால் ஏடிஆர் 72 ரக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு அடுத்தப்படியாக திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படுமா என்று பயணிகள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது எதிர்பார்த்து இருந்த அனைவருக்கும் உச்சி வெயிலில் இளநீர் குடித்தது போல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை வரும் 30-ந் தேதி முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் தொடங்க இருக்கிறது.

தினசரி மதியம் 12.55 மணிக்கு புறப்படுதுங்கோ!!!

திருச்சியில் இருந்து தினசரி மதியம் 12:55 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 1:55 மணிக்கு யாழ்ப்பாணம் சென்றடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 3:50 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த வழித்தடத்தில் ஏடிஆர் 72 வகை சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன. விமான கட்டணமாக 7 ஆயிரத்து 190 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு www.goindigo.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி- மும்பைக்கு சேவையை இயக்குது

இந்நிலையில் இதுகுறித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கூறியதாவது: கடந்த 14.02.2025 அன்று டெல்லியில் அமைந்து இருக்கக்கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை நிறுவன அதிகாரிகளை டெல்லியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து திருச்சிக்கு உள்நாட்டு போக்குவரத்து தொடர்பாக நான் கேட்டிருந்த விமான சேவைகளில் ஒன்றான திருச்சி - மும்பை நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ள அறிவிப்பை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதுபோல திருச்சி - யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை தொடங்கப்படவுள்ள அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டது. இந்த இரண்டு புதிய விமான போக்குவரத்து சேவையும் வரும் மார்ச் 30ஆம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கும்.

மிக முக்கியமான விமான சேவை இது

திருச்சி - யாழ்ப்பாணம் விமான போக்குவரத்து ஈழத் தமிழர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் தாயகத் தமிழர்களின் வியாபார முன்னேற்றத்திற்கும் இருபுறத் தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சார தொடர்பு மேம்படவும் இந்த விமான சேவை முக்கியமான ஒத்துழைப்பாக அமையும்.

அதுபோல திருச்சி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையோடு இணைக்கும் இந்த திருச்சி - மும்பை புதிய விமான போக்குவரத்து பலதொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும். மேலும், மும்பையிலிருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால் அதை இணைக்கும் படி இந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து- மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மற்றும் இண்டிகோ நிறுவனமும் தொடர்ந்து திருச்சிக்கு வழங்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!
பூத்துக் குலுங்கும் கொன்றை மரங்கள்: தஞ்சாவூர் அருகே மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை எழில்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget