இது ஸ்கூலா இல்ல லாட்ஜா..? போதையில் ஜோடி செய்த வேலை.. அரண்டு போன ஆசிரியர்கள்
பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ஜோடியாக படுத்து இருந்து இருக்காங்க. இதை பார்த்து அரண்டு போய் மாணவர்கள் ஆசிரியர்களிடம் சொல்ல வீடியோ எடுக்க போயிருக்காங்க.

தஞ்சாவூர்: இது ஸ்கூலா இல்ல லாட்ஜா? கூலாக காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஜோடியா தூங்கிக்கிட்டு இருக்கீங்க என்று ஆசிரியர்கள் அரண்டு போய் கேட்க வைத்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில்தான் நடந்துள்ளது. அதை விட இப்ப என்ன ஆச்சு என்று அந்த போதை ஆசாமி ஆசிரியர்களை மிரட்டியதுதான் ஹைலைட்.
அரசு பள்ளிகளில் இரவு நேரங்களில் ரவுண்ட்டு போட்டு நாங்கள் நல்ல குடிமகன்கள் என்று மது அருந்துவது, போதை மருந்து உட்கொள்வது என நாளுக்கு நாள் அலப்பறை மன்னர்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. அட இவங்க வெளியில இருந்து வந்து இப்படி பண்ணறாங்க என்று பார்த்தால் இவனுங்களை பார்த்து சில மாணவர்களும், மாணவிகளும் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு, அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருது. இதுதொடர்பாக ஒழுக்கக்கேடான செயல்களால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே அதிர்ச்சியில் இருக்காங்க. இப்போ இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் தாண்டி மது போதையில் ஒரு ஜோடி ஸ்கூல் சுவர் ஏறி குதித்து குப்புற அடித்து தூங்கிய சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ளது வாளாடி.. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.. இந்நிலையில், இப்பள்ளி வளாகத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஒரு ஆணும், பெண்ணும் ஜோடியாக படுத்து இருந்து இருக்காங்க. இதை பார்த்து அரண்டு போல மாணவர்கள் ஆசிரியர்களிடம் சொல்ல ரகசியமாக அந்த ஜோடியை வீடியோ எடுக்க போயிருக்காங்க.
அந்த ஜோடி தூங்கி கொண்டிருந்ததால் கடுப்பான ஆசிரியர் தட்டி எழுப்பி இருக்காங்க. அப்போதுதான் தெரிந்து இருக்கு. அவர்கள் நல்ல குடிமகன், குடிமகள் என்று. அம்புட்டு போதையில் இருவரும் இருந்து இருக்காங்க. பள்ளி வளாகத்தில் காம்பவுண்ட் சுவர் மீது எகிறி குதித்து இவர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு யாருப்பா நீங்க என்று கேட்க திடீரென ஆசிரியர்கள் வந்து நிற்பதை பார்த்ததுமே அந்த ஜோடி அதிர்ச்சியடைந்துள்ளது.
அப்போது அந்த நபர், "நடுராத்திரி இங்கு வந்துட்டோம்.. அன் டைம் (போதையில இங்கிலீசு வேற) என்பதால் இங்கு வந்து படுத்துட்டோம். இப்போது கிளம்புறோம்.. நாங்க இங்கே வந்ததில் இப்ப என்ன தப்பு?" என்று அலட்சியமாக கேட்டு ஆசிரியர்களை மிரட்டும் தொனியில் பார்த்துள்ளார். இதைக்கேட்டு ஆசிரியர்களுக்கு ஷாக். ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? நடுராத்திரி படுத்துவிட்டு போவதற்கு இதென்ன லாட்ஜா?" என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர், "நைட்டு இங்க படுத்துட்டு காலையில் போய் விடுவோம்னு சொல்றேன் இல்ல? இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை" என்று மீண்டும் மிரட்டியிருக்கிறார்.
இதையடுத்து, ஆசிரியர்கள் "ஏய் நாங்க என்ன லாட்ஜா கட்டி விட்டிருக்கோம்" என்று கேட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன், அந்த ஜோடியை வீடியோவாக எடுத்து போலீசில் புகார் செய்துள்ளனர். லால்குடி போலீசார் விசாரித்ததில் அந்த வாலிபர் கீழவாளாடியை சேர்ந்த நவீன்குமார் (28) என்பது தெரிய வந்து அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களாகவே இந்த பள்ளி வளாகத்திற்குள் சிலர் சரக்கு அடித்துவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே தூக்கி வீசி விட்டு போய் விடுகிறார்களாம்.. மேலும், பள்ளி வளாகத்திலுள்ள பொருட்களையும் சேதப்படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு நடுவில் இப்படி கள்ள ஜோடியே, பள்ளி வளாகத்தில் இரவெல்லாம தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த வீடியோ, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

