மேலும் அறிய
Advertisement
அடகுக்கடை, மளிகைக்கடை, மெடிக்கல்...ஒரே நாளில் 10 கடைகளில் திருட்டு; நாகையில் தொடர் திருட்டால் வியாபாரிகள் கவலை..!
இன்று அதிகாலை வந்த மர்ம கும்பல் அடகுக்கடை, மளிகைக்கடை, மெடிக்கல், தையலக கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டுகளை உடைத்து லாவகமாக திருடி சென்றுள்ளனர்.
நாகை அருகே அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட கடைகளில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம், 2 பவுன் நகை திருடப்பட்டது. தொடர் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கீவளூர் காவல்துறையை கண்டித்து வர்த்தகர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் ஆழியூர் கடைத்தெருவில் 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் வழக்கம்போல வர்த்தகர்கள் நேற்று இரவு கடையை மூடிவிட்டு சென்று இன்று அதிகாலை திறந்துள்ளனர். அப்போது 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் கடைகளில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், இரண்டு பவுன் நகை உள்ளிட்டவைகளை திருடுபோனதை கண்டறிந்தனர். இன்று அதிகாலை வந்த மர்ம கும்பல் அடகுக்கடை, மளிகைக்கடை, மெடிக்கல், தையலக கடை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டுகளை உடைத்து லாவகமாக திருடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆழியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மின் மோட்டார், கைப்பம்பு உள்ளிட்ட பொருட்களை திருடி தப்ப முயன்ற குற்றவாளியை பொதுமக்கள் பிடித்து கீழ்வேளூர் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், போலீசார் குற்றவாளியை தப்பவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, திருட்டு கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும், அலட்சியமாக செயல்படும் காவல்துறையை கண்டித்தும் கடைகளை அடைத்து, ஆழியூர் வர்த்தகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதித்த நிலையில், கீழ்வேளூர் போலீசார் வர்த்தகர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.
=
இதேபோல் நாகை மாவட்டம் குருக்கத்தி கடைத்தெருவில் மளிகை கடை, அரிசி கடை உள்ளிட்ட இரண்டு கடைகளிலும் ரொக்க பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றுள்ளது. கீவளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகள் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை ஒரு சில காவல்துறையினர் தடுத்து வழக்கு பதிவு செய்தாலும் ஒரு சில காவல்துறையினர் கையூட்டுப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மேலும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடாததின் காரணமாகவே இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாகை அருகே ஆழியூர் மற்றும் குறுக்கத்தி பகுதிகளில் அடுத்தடுத்து 10 க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம கும்பல் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆழியூர் கடைத்தெருவில் திருடுவதற்கு வரும் மர்ம நபர் ஒருவர் கையில் பையுடன், கடைக்குள் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி ஒன்றும் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தேர்தல் 2024
தேர்தல் 2024
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion