மேலும் அறிய
Advertisement
தேரோடும் வீதிகளில் இனி வயர் இல்லை; அமைச்சரின் பேச்சுக்கு திருவாரூர் மக்கள் வரவேற்பு
திருவாரூர் தேரோடும் வீதிகளில் இனி வயர் இல்லை என சட்ட சபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுக்கு திருவாரூர் பொதுமக்கள் வரவேற்பு
பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் சர்வதேச பரிகாரத் தலமாகவும் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் எனப் போற்றப்படும் ஆழித்தேரோட்டம் வருடா வருடம் பங்குனி மாதத்தில் நடைபெறும். இந்த ஆழித்தேரின் உயரம் 96 அடியில் எடை 350 டன் எடை கொண்ட பெருமை வாய்ந்த தேராக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெறும் பொழுது தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான தேரோட்டத்தினை காண்பதற்காக திருவாரூருக்கு வருகை தருவார்கள் குறிப்பாக ஒவ்வொருவர் வீடுகளிலும் உறவினர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்த வண்ணம் இருக்கும்.
அவ்வாறு உலகம் போற்றும் ஆழித்தேரோட்டம் நடைபெறும் பொழுது நான்கு வீதிகளிலும் அதாவது கீழ வீதி மேலவீதி வடக்கு வீதி தெற்கு வீதி ஆகிய விதிகளில் மின்தடை செய்யப்படும் மின்சாரத்தினால் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் நான்கு வீதிகளிலும் சுற்றி உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணனிடம் மின்சாரம் தடை செய்யாமல் இருப்பதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தேரோடும் வீதிகளில் மேலே செல்லும் மின் கம்பிகளை புதைமின் வடங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதைவிட மின்கம்பிகளை அமைப்பதற்கு ரூபாய் 6.57 கோடிக்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார் விரைவில் பணிகள் முடிப்பதற்கு அறிவுறுத்தப்படும் என பதில் அளித்தார். இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் நகர மக்கள் தமிழக அரசுக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவாரூரைச் சேர்ந்த ரஜினி சின்னா என்பவர் கூறுகையில், “திருவாரூர் என்றாலே தேர் என்பார்கள். அந்த வகையில் தேரோட்டம் நடைபெறும் பொழுது ஒவ்வொரு ஆண்டும் மின்சாரம் நிறுத்தப்படும். இதன் காரணமாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் மின்சாரம் இன்றி மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வந்தார்கள். இதன் காரணமாக மின்சாரம் நிறுத்தாமல் தேரோட்டம் நடைபெறுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த கோரிக்கையை ஏற்று இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கூறி அதற்கான மாற்று பணிகள் தொடங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் நிறைவடையும் என கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆன்மிகம்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion