மேலும் அறிய

திருவாரூர்: பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

எரிவாயு கிணற்றில் உள்ள அதிகப்படியான எரிவாயு அழுத்தத்தை முழுமையாக வெளியேற்றி கிணற்றினை பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு 39 நாட்கள் ஆகும் என ஓஎன்ஜிசி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர், நாகை, காரைக்கால் (புதுச்சேரி) உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விலை நிலங்களுக்கு அடியில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலத்தில் அடிக்கடி எண்ணெய் கசிவு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து அதன் மூலமாக எண்ணெய் எரிவாயு எடுத்து வந்ததாக தெரிவித்திருந்தது. இந்த கிணற்றில் அதிக அழுத்தத்துடன் கூடிய வாய்வு தொடர்ந்து வெளியேறி வந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டு பணிகளை நிறுத்திக் கொண்டு ongc நிறுவனம் வெளியேறியது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் மீண்டும் பராமரிப்பு பணி என்கிற பெயரில் ஓஎன்ஜிசி நிறுவனம் கனரக வாகனங்களுடன் பெரியகுடி எண்ணெய் எடுக்கும் பணிகளை தொடங்கியது.

திருவாரூர்: பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். உடனடியாக அந்த பகுதியில் பணிகளை நிறுத்தி ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தனர். அதனை அடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஓஎன்ஜிசி அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனான சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரியகுடி கிராமத்தில் அமைந்துள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் எரிவாயு கிணற்றில் அதிகப்படியான வாய்வு அழுத்தம் பொதுமக்களுக்கு எந்த நேரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் அதனை பாதுகாப்பான முறையில் வாய்வு அடர்த்தியை முழுவதுமாக குறைத்து முழுமையாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் உரிய முறையில் எழுத்துப்பூர்வமாக ஓஎன்ஜிசி விண்ணப்பிக்க வேண்டும், மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய அனுமதி வழங்கிய பின்னர் எண்ணெய் கிணற்றினை மூடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும் எக்காரணத்தை முன்னிட்டு மீண்டும் இதை வணிக ரீதிதியாக பயன்படுத்துவதற்கோ செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது இந்த எண்ணை கிணற்றை மூடும் குழுவில் விவசாயிகளை இணைத்துக் கொண்டு பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்: பெரியகுடி ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இந்த எரிவாயு கிணற்றில் உள்ள அதிகப்படியான எரிவாயு அழுத்தத்தை முழுமையாக வெளியேற்றி கிணற்றினை பாதுகாப்பான நிலையில் வைப்பதற்கு 39 நாட்கள் ஆகும் என ஓஎன்ஜிசி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. மேலும் 39 நாட்களுக்குப் பிறகு கிணற்றினை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஓஎன்ஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட கண்காணிப்புக்குள் ஒன்று செயல்பட்டு வருகிறது கிணற்றில் வேலை நடைபெறும் பொழுது அவற்றைக் குழு கண்காணிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தரப்பில் இருந்து இரண்டு நபர்கள் கண்காணிப்பு குழுவுடன் ஓஎன்ஜிஜி பணிகளை கண்காணிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget