1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை

விழிப்புணர்வு குறும்படங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ள போலீசார் வழக்குகள் பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

FOLLOW US: 

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக திருவாரூர் மாவட்டத்தில் 1320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு 930 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், ஊரடங்கை மீறியதாக ரூபாய் 92 ஆயிரம் அபராதம் வசூலித்துள்ளனர்.  கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த சூழலில் ஊரடங்கு காரணமாக சற்றே குறைய ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருந்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் தேவைகள் இன்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி கயல்விழி தெரிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டிய சூழலில் தமிழகம் முழுவதும் கடந்த 24ஆம் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நிலையில் காவல்துறை சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த 930 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1320 வழக்குகள்.. 930 வாகனங்கள் பறிமுதல்.. அதிரடி காட்டும் திருவாரூர் காவல்துறை

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக் கவசங்கள் அணியாமலும் விதிமுறைகளை மீறி நடந்த 390 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 92 ஆயிரத்து 900 ரூபாய் பொதுமக்களிடமிருந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுக்க இதே போல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார் மக்கள் அநாவசியமாக கூட வேண்டாம் என்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஊரடங்கை தொடர்ந்து மீறி நடப்போர் மீது வழக்குகளும் அவர்கள் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் என காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது

Tags: lockdown Police tamil news thirivarur lockdown thiruvar thiruvarur news

தொடர்புடைய செய்திகள்

டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: கல்வி அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் பங்கேற்பு..!

டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறப்பு: கல்வி அமைச்சர் உட்பட 7 அமைச்சர்கள் பங்கேற்பு..!

இரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

இரட்டை தலைமையில் தான் அதிமுக; முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் 70 சதவிகிதம் தூர்வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது : வேளாண்துறை அமைச்சர் தகவல்

டாப் நியூஸ்

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

BREAKING: சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

தலைமறைவாக உள்ள ஆபாச யூடியூபர் மதனின் மனைவி, தந்தையிடம் போலீசார் விசாரணை..!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!

Reliance Jio fiber | இனி வீட்டுக்கு வீடு வைஃபை தான்.. அதிரடி சலுகையுடன் களமிறங்கும் ஜியோ ஃபைபர்!