மேலும் அறிய
திருவாரூர் மாவட்டத்தில் 60 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு!
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 94 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா
திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, மாவட்டம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக இன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆக உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
மேலும் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 94 நபர்கள் சிகிச்சையில் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டிற்கு சென்ற பின்னர் 15 தினங்கள் அவரவர் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை, மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 558 நபர்கள் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் இன்று மட்டும் 230 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















