மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - நெல் பயிர்கள் நீரில் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை

குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் 3,000 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கியுள்ளது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் மேலும் திண்டுக்கல் நாமக்கல் திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அனைத்து  மாவட்ட ஆட்சியர்களும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றால் அரசின் சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ள இடங்களில் மக்கள் வந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் சிறுவர்கள் ஆற்றில் சென்று குளிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர் விடுத்திருக்கிறார். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


திருவாரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - நெல் பயிர்கள் நீரில் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர், குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொரடாச்சேரி, மாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணித்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் சாய தொடங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் குடவாசல் வலங்கைமான் நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் ஒட்டுமொத்தமாக விவசாயம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - நெல் பயிர்கள் நீரில் மூழ்குவதால் விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில்  தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குறுவை நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி வருகின்றன. உடனடியாக வேளாண் துறை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கினால் மட்டுமே செய்த செலவு தொகையாவது கைக்கு கிடைக்க கூடிய நிலை உருவாகும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கக்கூடிய நிலை உருவாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆகவே தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக கணக்கெடுக்கும் பணியினை தொடங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Thanjavur District Power Shutdown (04.07.2026): நாளைக்கு கரண்ட் 'ஆஃப்'... பாபநாசம், திருப்புறம்பியம் பகுதி மக்களே, இன்றே சார்ஜ் போட்டு ரெடி ஆகிடுங்க!
Thanjavur District Power Shutdown (04.07.2026): நாளைக்கு கரண்ட் 'ஆஃப்'... பாபநாசம், திருப்புறம்பியம் பகுதி மக்களே, இன்றே சார்ஜ் போட்டு ரெடி ஆகிடுங்க!
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
“கல்லில் செதுக்கிய வரலாறு... நாட்டின் நாணயத்திலும் நிலைத்த பெருமை!” என்ன தெரியுங்களா?
“கல்லில் செதுக்கிய வரலாறு... நாட்டின் நாணயத்திலும் நிலைத்த பெருமை!” என்ன தெரியுங்களா?
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
New Renault Kwid: ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
iPhone 16 Discount: ரூ.10,000 தள்ளுபடி.! ஐபோன் 16 வாங்குற ஐடியா இருந்தா இந்த வாய்ப்ப தவற விடாதீங்க; எப்படி வாங்குறது.?
ரூ.10,000 தள்ளுபடி.! ஐபோன் 16 வாங்குற ஐடியா இருந்தா இந்த வாய்ப்ப தவற விடாதீங்க; எப்படி வாங்குறது.?
Embed widget