மேலும் அறிய
Advertisement
திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக அரசின் சார்பில் புத்தகத் திருவிழா - ஆட்சியர் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக அரசின் சார்பில் புத்தகத் திருவிழா - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக அரசின் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா என்பது நடத்தப்பட்டு இதன் முக்கிய நோக்கமாக வாசிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பது இதனுடைய முக்கிய குறிக்கோளாக உள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் முதன் முதலாக வருகிற மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை புத்தகத் திருவிழா திருவாரூரில் நடைபெறும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ் எஸ் நகரில் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது. முதல் முறையாக நடைபெறும் இந்த புத்தக திருவிழாவின் நோக்கமானது நமது வருங்கால சந்ததியினரின் படித்தலில் ஆர்வம் காட்டுதல் வேண்டும் என்பதாகும். நல்ல ஒரு ஆளுமைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசின் உத்தரவுக்கிணங்க இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் 9 நாட்களும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெறும் மேலும் மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் புத்தகத் திருவிழாவை பார்வையிட அழைத்து வந்து வாசிக்கும் ஆர்வத்தினை உருவாக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion