மேலும் அறிய
Advertisement
Thiruvarur: ஹேர் கிளிப்பை விழுங்கிய குழந்தை; 10 நிமிடத்தில் வெளியே எடுத்த மருத்துவர்
ஹேர் கிளிப்பை விழுங்கிய மூன்று வயது குழந்தை. இரைப்பையில் சிக்கிய கிளிப்பை அறுவை சிகிச்சையின்றி பத்து நிமிடத்தில் வெளியே எடுத்த மருத்துவர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் கீதா தம்பதியினர். தமிழரசன் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சனா என்கிற 3 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது தான் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்றை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த ஹேர் கிளிப்பை குழந்தை விழுங்கியுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் எக்ஸ் ரே எடுக்குமாறு கூறியுள்ளார். எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது இரைப்பையில் ஹேர் கிளிப் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருவாரூர் ஜவுளிக் காரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அங்குள்ள மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். பெற்றோர்கள் அங்கு குழந்தையை அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன் அறுவை சிகிச்சையின்றி என்டோஸ் கோபி மூலம் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி குழந்தையின் இரைப்பையில் உள்ள ஹேர் கிளிப்பை பத்து நிமிடங்களில் அகற்றியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் சுந்தர் கூறுகையில், ”குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பேட்டரி மற்றும் கூர்மையான பொருட்களை குழந்தைகள் விழுங்கும்போது அது அவர்களது உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும். எனவே குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாகவும் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion