மேலும் அறிய
Advertisement
திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்
உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆற்றுப் பாசனத்தை நம்பியே அதிகளவில் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மணிகளை எடுத்து சென்றால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழையில் சாய்ந்து உள்ள நிலையில், விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தாங்கள் செய்த செலவு தொகையை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ள நிலையில் கஷ்டப்பட்டு அறுவடை இயந்திரங்களை வைத்து ஒரு சில பகுதிகளில் தாங்கள் பயிரிட்ட நெல் மணிகளை அறுவடை செய்து வந்தால், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கூப்பாட்சி கோட்டை, கண்டிதம்பேட்டை, மேலநெம்மேலி, பெருகவாழ்ந்தான், பாளையங்கோட்டை, திருமக்கோட்டை, வல்லூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தினால் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல் மணிகள் மழையில் நினைந்து பாதிக்கக் கூடிய சூழல் உருவாகும். ஆகையால் அரசு அதிகாரிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். உடனடியாக தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, ஈரப்பதத்தை உயர்த்தி விவசாயிகளின் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion