மேலும் அறிய

சூழ்ச்சி, சூது இருக்கிறது... சதி பின்னப்பட்டு வருகிறது... திருமாவளவன் சொன்னது எதற்காக?

தி.மு.க.,வை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற என்னும் சக்திகள் திருமாவை ஒரு‌ தூதாக பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள்.

தஞ்சாவூர்: நம்மை பற்றியே பேசுகிறார்கள் என்று மகிழ்ச்சியடைய கூடாது. சூது, சூழ்ச்சி, சதி பின்னப்பட்டு வருகிறது என்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.  தற்போது என்னை சுற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெறுகிறது. நம் மீது வைத்துள்ள மரியாதைக்காக இல்லை. நம்மை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்ற சக்திகளின் சதி அது.

நம்மைப் பற்றியே பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடையவதற்கு இல்லை. அதில் சூது இருக்கிறது. சூழ்ச்சி இருக்கிறது. சதி பின்னப்பட்டு வருகிறது. அவர்களின் உண்மையான குறி தி.மு.க., தான். திருமாவளவன் இல்லை.

தி.மு.க.,வை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்ற என்னும் சக்திகள் திருமாவை ஒரு‌ தூதாக பயன்படுத்தி அதை நிறைவேற்றி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு பலியாகும் அளவிற்கு திருமாவளவன் பலவீனமானவன் இல்லை. ஏதோ அழுத்தம் அச்சுறுத்தல் என்கிறார்கள். என்னுடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும். ஏன் இதை திரும்பத் திரும்ப நான் சொல்கிறேன் என்றால். எனது நம்பகத்தன்மை மீதே கை வைக்கிறார்கள்.

திருமாவளவன் இங்கு பேசிக்கொண்டு, அங்கு ஏதோ வேலை செய்கிறார் என்கிறார்கள். அந்த அரசியல் எனக்கு தெரியாது. அந்த அரசியல்  தேவையில்லை. அப்படி ஒரு தாக்குதல் என் மீது நடத்தப்படுகிறது திமுகவுடன் பேசிக்கொண்டு மறைமுகமாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதோ என்ற ஒரு சந்தேகத்தை என் மீது எழுப்புகிறார்கள். என்னை நம்பக்கூடிய என் தோழர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் சனாதனத்திற்கு எதிராக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் எங்கள் நலன் பெரிது என்று சனாதனம் உள்ள அணிக்கு ஒரு போதும் இடம் கொடுக்கமாட்டோம். அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்பட்டாலும் அது தாங்கிக் கொள்ள வலிமை விசிகவிற்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த திருமாவளவன் பங்கேற்கவில்லை. அந்த விழாவில் விஜய் பேசும்போது கூட்டணி கட்சி அழுத்தத்தால் திருமாவளவன் பங்கேற்கவில்லை என்று விமர்சனம் செய்தார். மேலும் விசிகவை ஆதவ் அர்ஜூனா முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை தாக்கி பேசியதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.  தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும் விசிகவை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்தபடியே இருந்தது. இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார் திருமாவளவன். இருப்பினும் கடந்த சில நாட்களாக விசிகவை சுற்றி பல்வேறு விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்தபடியே இருந்தது.

இந்நிலையில் கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன். என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று ஆதவ் அர்ஜூனா அறிக்கை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
Embed widget