மேலும் அறிய

மாநகராட்சி இடத்தில் மதுபார் நடத்தி 19.14 கோடி இழப்பை ஏற்படுத்திய திமுக பிரமுகர்

’’கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை  19 கோடியே 14 லட்சத்து ஆயிரத்து 627 ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு செய்தது தெரியவந்தது’’

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா இடத்தை, மதுபான பாராக  மாற்றி, கடந்த19 ஆண்டுகளாக, மாநகராட்சிக்கு  19.14 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய, திமுக, முன்னாள் கவுன்சிலர் உட்பட அவரது சகோதரர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர்.   தஞ்சாவூரில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 41,969 சதுர அடியில் ஸ்ரீ சுதர்சன சபா அமைந்துள்ளது. 1925 ஆம் ஆண்டு 99 ஆண்டு குத்தகையாக விடப்பட்டது. இங்கு ஆன்மீக சொற்பொழிவுகள், புத்தக வெளியீடு போன்றவை நடத்தவே அனுமதி அளிக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த கடந்த 1991ம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி, சபாவிற்கு ஆர்கே.ராமநாதன் தலைவராகவும், அவரது சகோதரர்களான நாகராஜன் செயலாளராகும், குமரவேல் பொருளாளராகவும், மணி பொது குழு உறுப்பினராகவும் ஆகினார். இதில் நாகராஜன், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். 

பின்னர் சபாவில் இருந்த முந்தயை உறுப்பினர்களை நீக்க விட்டு, தனக்கு ஆதரவாக உள்ளவர்களை உறுப்பினராக நியமித்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து சுதர்சன சபாவில் நிகழ்ச்சி நடத்துவதை நிறுத்தி விட்டு, வளாகத்தில் மதுபான பாராக மாற்றி நடத்துவதற்காக அனுமதி பெற்று நடத்தினர். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகிகள், வருவாய் துறையினர் சோதனை செய்ததில்,  கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி வரை  19 கோடியே 14 லட்சத்து ஆயிரத்து 627 ரூபாய் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு செய்தது தெரியவந்தது.

மாநகராட்சி இடத்தில் மதுபார் நடத்தி 19.14 கோடி இழப்பை ஏற்படுத்திய திமுக பிரமுகர்

மேலும், சபா வளாகத்தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக மதுபான பார், பேக்கரி, ஹோட்டல், செல்போன் கடை ஆகியவை கட்டப்பட்டு உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது  தெரியவந்தது.  இதையடுத்து, கடைகளை அகற்றுமாறு, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்.கே.நாகராஜன் உள்ளிட்டவர்களுக்கு மாநகராட்சி சார்பில், நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. தொடர்ந்து, நாகராஜன் உள்ளிட்டோர் நோட்டீஸ் தொடர்பாக தஞ்சாவூர் கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சபாவில் உறுப்பினர் தொடர்பான அளித்த விபரங்களில் தகவல் மோசடியாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, சபாவிற்கு சொந்தமான இடத்தில் உள்வாடகைக்கு விடப்பட்ட ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டன. பின்னர் செப்டம்பர் 29 ஆம் தேதி மதுபான பார், பேக்கரி, மொபைல் கடைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன. இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார் உத்தரவின் பெயரில் இளநிலை செயற்பொறியாளர் கண்ணதாசன்,  மாவட்ட குற்றப்பிரிவில், ஆர்.கே. ராமநாதனின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்தார்.

மாநகராட்சி இடத்தில் மதுபார் நடத்தி 19.14 கோடி இழப்பை ஏற்படுத்திய திமுக பிரமுகர்
சரவண குமார், தஞ்சை மாநகராட்சி ஆணையர்

அதன் பெயரில், மோசடியாக ஆவணங்களை தயார்படுதல், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு போன்ற 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணியை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதால் தற்போது தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் சகோதரர்களான ஆர்.கே.ராமநாதன், குமரவேல்,நாகராஜ், ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை உள்வாடகைக்கு விட்டு, 4.61 லட்சம்  வருவாய் இழப்பு ஏற்படுத்தியாக மாநகராட்சி கமிஷனர் சரவணகுமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் படி, மணியை போலீசார் ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை பகுதியில் திமுகவிலும், பொது மக்களிடையே சிம்மசொப்பனமாக இருந்து வந்த ஆர்கே ராமநாதன் மற்றும் இவரது சகோதரகள், தஞ்சைக்கு போலீஸ் மற்றும் எந்த அதிகாரிகள் வந்தாலும், அசைக்க முடியாத இடத்திலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவர்களிடம் நெருங்க பயந்து வந்தார்கள். ஆனால் ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்று வந்த பிறகு. இவர்களது சகோதரர்களில் ஒருவரை கைது செய்தும், வழக்கு தொடர்ந்திருப்பது, தஞ்சையில் திமுகவினர் மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Jailer 2 : வேற லெவல்... ஜெயிலர் 2 பட அறிவிப்பு டீசர் இதோ
Jailer 2 : வேற லெவல்... ஜெயிலர் 2 பட அறிவிப்பு டீசர் இதோ
பொன்முடி மீது சேறு வீசிய சம்பவம்.. கிராமத்தில் போலீஸ் அடக்குமுறையா? கொதித்த அண்ணாமலை!
பொன்முடி மீது சேறு வீசிய சம்பவம்.. கிராமத்தில் போலீஸ் அடக்குமுறையா? கொதித்த அண்ணாமலை!
பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் ; ஐயனை நோக்கி திருவாபரண பெட்டி ; புராண கதை தெரியுமா உங்களுக்கு !
Jailer 2 : வேற லெவல்... ஜெயிலர் 2 பட அறிவிப்பு டீசர் இதோ
Jailer 2 : வேற லெவல்... ஜெயிலர் 2 பட அறிவிப்பு டீசர் இதோ
பொன்முடி மீது சேறு வீசிய சம்பவம்.. கிராமத்தில் போலீஸ் அடக்குமுறையா? கொதித்த அண்ணாமலை!
பொன்முடி மீது சேறு வீசிய சம்பவம்.. கிராமத்தில் போலீஸ் அடக்குமுறையா? கொதித்த அண்ணாமலை!
பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
பொங்கல் முடிந்து சென்னை ரிட்டர்னா? தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்! முன்பதிவு முழு விவரம்!
Happy Kaanum Pongal 2025 Wishes: அன்பானவர்களுக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்து அனுப்புங்க! 
Happy Kaanum Pongal 2025 Wishes: அன்பானவர்களுக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்து அனுப்புங்க! 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. காளை குத்தியதில் வீரர் பலி!
ஒத்திவைக்கப்பட்ட UGC நெட் தேர்வு.. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதியை அறிவித்த NTA
ஒத்திவைக்கப்பட்ட UGC நெட் தேர்வு.. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதியை அறிவித்த NTA
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
Embed widget