விவசாயத்திற்கு தனி மத்திய பட்ஜெட் வேண்டும் - பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் விவசாயிகள்மனு
கும்பகோணத்தில் உள்ள உச்சிபிள்ளையாருக்கு 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி, தொடர்ந்து காந்தி சிலைக்கு தேசிய கொடியுடன் சென்று மனு
இந்தியர்களின் மொத்த மக்கள் தொகையில் 69 சதவீத விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலன் கருதி பாராளுமன்றத்தில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை 75 வது விடுதலை ஆண்டிலிருந்து சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணத்தில் உள்ள உச்சி பிள்ளையாருக்கு 108 தேங்காய்கள் உடைத்தும், தேசியக்கொடியுடன் காந்தி சிலைக்கு மனு அளித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் நுாதன போராட்டம் நடைபெற்றது. இந்தாண்டு 75 வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாடப்பட்டு இருந்தும், இந்திய விடுதலைக்காக போராடியவர்களில், பெரும்பான்மையானவர்கள் சிறை சென்று கொடும் துயரங்களை, அர்ப்பணித்து உணர்வுடன் அனுபவித்தவர்கள் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்.
இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு தடவை கூட பாராளுமன்றத்தில், இந்திய விவசாயிகளின் நலன் கருதி, வேளாண்மைக்கு என சிறப்பு நிதி நிலை அறிக்கையை, விவசாயிகளுகாக பாடுபடும் என்று சொல்லும் எந்த ஒரு மத்திய அரசில் ஆட்சி செய்தவர்கள், வெளியிடவோ, சமர்ப்பிக்கவோ இல்லை. இதனை எடுத்துச் சொல்வதற்காக, 3 நிமிடம் விவசாயிகளை அனுமதி கோரி, மத்திய நிதியமைச்சரிடம், கடந்த குளிர் கால கூட்ட தொடரின் விண்ணப்பித்திருந்தோம். பிரதமர் மோடிக்கும் வேளாம்மைக்கான சிறப்பு நிதிநிலை அறிக்கையினை இந்தியாவின் 75 ஆவது சுதந்திர ஆண்டில் இருந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வெளியிடுகின்ற வாய்ப்பினை வாய்ப்பினை, பிரதமர் நரேந்திர மோடி காலத்தில் இருந்து தொடங்கிட அறிப்பை வெளியிடுமாறு மின்னஞ்சல் அனுப்பி, வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இந்தியாவில் மக்கள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் முழக்கமான ஜெய் கிசான் (வாழ்க விவசாயிகள்), ஜெய் ஜரான் (வாழ்க ராணுவ வீரர்கள்) என்ற முழக்கத்தை முழுமனதோடு மதிப்பளித்து, இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டில் 69 சதவீத விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நலன் கருதி, இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைக்கு என சிறப்பு நிதி அறிக்கையினை பாராளுமன்றத்தில் வெளியிட்டு, இந்தியாவிற்கு புதிய பெருமையை சேர்க்க வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக கும்பகோணத்தில் உள்ள உச்சிபிள்ளையாருக்கு 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தி, தொடர்ந்து காந்தி சிலைக்கு தேசிய கொடியுடன் சென்று மனு அளித்து, தேசிய கொடியுடன் நுாதன போராட்டம் செய்தனர். நிகழ்ச்சிக்கு விவசாயி வாசுதேவன் தலைமை வகித்தார் விவசாயி இளங்கோவன் முன்னிலை தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சண்முகசுந்தரம் அவர்கள் விளக்க உரையாற்றினார் விவசாயி சுவாமிநாதன் நன்றி கூறினார்.
நாளை பொங்கலோ பொங்கல்...! - பானையை அலங்கரிக்கும் மஞ்சள் கிழங்கு விற்பனை மும்முரம்