தஞ்சாவூர்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை: டெல்டா மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? விரைவில் தொடங்கும் பணிகள்!
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே 193 கி.மீ. இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கள ஆய்வுகள் முடிந்துள்ளது.

தஞ்சாவூர் முதல் விழுப்புரம் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும் என்று டெல்டா மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதிகளவிலான வர்த்தக போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் இரட்டை ரயில் பாதையை திட்டத்தை உடன் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் அரண்மனை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பள்ளி அக்ரஹாரம் பெருமாள் கோயில் கும்பகோணம், சுவாமிமலை, தாராசுரம் என ஏராளமான சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே 193 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை
சென்னையில் இருந்து விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மார்க்கமாக மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில் என, தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, சிக்னல், கிராசிங் பிரச்னை ஏதுமின்றி எதிரெதிர் திசைகளில் ரயில்கள் எளிதில் செல்கின்றன. தலைநகருக்கும் குறித்த நேரத்தில் வந்து செல்ல முடியும் என்பதால், இந்த ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டை ரயில் பாதை திட்டம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு திட்டமாகும். இது காவிரி டெல்டா பகுதிக்கும் சென்னைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். தற்போது தஞ்சாவூர் - விழுப்புரம் இடையிலான ரயில் பாதை ஒற்றை வழி பாதையாக உள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து க்ராசிங் செய்வதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. தென் மாவட்ட மக்கள் சென்னை செல்ல இந்தப் இரட்டை வழித்தட பாதை மாற்றுவது அவசியமாகிறது. சரக்கு போக்குவரத்துக்கும் இந்தப் பாதை முக்கியமானது.
தஞ்சாவூர் - விழுப்புரம் இடையே 193 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு (Preliminary Engineering cum Traffic Survey) அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கள ஆய்வுகள் முடிந்துள்ளது.
தோராயமான செலவு சுமார் ரூ. 5,800 கோடி
இந்த திட்டத்திற்கான தோராயமான செலவு சுமார் ரூ. 5,800 கோடி என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதேபோல ரயில் தடம் அமைக்க 594 ஹெக்டர் நிலத்தில் 510 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ள நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும். ரயில் தடம் அமைக்கும் பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தஞ்சை - விழுப்புரம் இரட்டை வழி பாதை வர வேண்டுமென பொதுமக்கள் ரயில்வே பயணிகள் அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர் கோரிக்கைகளையும் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதால் ரயில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





















