Watch Video: நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே...! - ஒருமணிநேரம் போராடியும் பூட்டை உடைக்க முடியாமல் நடையை கட்டிய திருடன்
’’போலீசார் விசாரணை செய்து விட்டு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விடுவார்கள். திருட்டு குறித்து கேட்டால், திருடன் கிடைத்தால் விசாரணை செய்கின்றோம் என்று கூறி அனுப்பி விடுவார்கள்’’
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நடுவிக்கோட்டை ஊராட்சியில் நாடியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மிகவும் பழமையானதும், அக்கிராமத்திற்கு சொந்தமான கோயிலாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் மிகச் சிறப்பான முறையில் விமர்சையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலுக்கு ஏராளமானோர் குலதெய்வமாக இருப்பதால், வெளிநாடு, மாவட்டத்திற்கு வேலைக்காரணமாக சென்றவர்கள், விழாக்காலங்கள் மட்டுமில்லாமல், தினந்தோறும் கூட்டமாக வந்து, தரிசனம் செய்வார்கள். இதனால் இக்கோயில் அப்பகுதியில் பிரபலமான கோயிலாகும்.அதிக கூட்டம் வருவதால், உண்டியலில் அதிக அளவில் வருமானமம் உள்ளதால், இது வரை மூன்று முறை மர்மநபர்கள் கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இது பற்றி அவ்வப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள. போலீசாரும் வந்து விசாரணை செய்து விட்டு, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விடுவார்கள். திருட்டு குறித்து போலீசாரிடம் கேட்டால், திருடன் கிடைத்தால் விசாரணை செய்கின்றோம் என்று கூறி அனுப்பி விடுவார்கள். இதனால் கிராம மக்களும் வேறு வழியின்றி விட்டு விடுவார்கள்.
பட்டுக்கோட்டையில் ஒருமணி நேரம் போராடியும் பூட்டை உடைக்க முடியாமல் நடையை கட்டிய திருடன் pic.twitter.com/2i7DdLLMcR
— Kathiravan (@kathiravan_vk) December 3, 2021
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் முக கவசம் அணிந்து இரும்பு கடப்பாரை போல் உள்ளதை வைத்து கொண்டு கோயில் கருவறையின் பூட்டை உடைக்க 1 மணிநேரமாக முயற்சித்துள்ளார். அப்போது பல முறை பலவிதமான முறையில் முயற்சிப்பார். ஆனால் நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்கு சென்றும், கருவறையில் பூட்டை உடைப்பதில் குறியாக மர்மநபர் இருப்பார். ஆனால் பல முறை முயற்சித்தும் உடைக்க முடியாததால், விட்டு விட்டு சென்று விடுவார். இந்த சம்பவ காட்சிகள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மீண்டும் வாட்டாத்திக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுபற்றி இந்த கிராமத்து மக்கள் கூறுகையில், இக்கோயிலுக்கு சொந்தமானவர்கள், வெளிநாடு, மாவட்டத்தில் இருப்பதால், அதிக வருமானமும், விலை அதிக உள்ள பொருட்களும் உள்ளன. இதனையறிந்த மர்மநபர்கள், அடிக்கடி இக்கோயிலில் திருட்டு சம்பவம் நடைபெறுகின்றது.தற்போது நடந்த கொள்ளை முயற்சியை சிசிடிவி காட்சிகளோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் இதுவரை மனு ரசீது கூட வழங்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசாரின் அலட்சியத்தால், கோயில் நகைகள், உண்டியல்கள் மற்றும் விலை அதிகமாக உள்ள பொருட்கள் பெரிய அளவில் கொள்ளை நடந்து போய் விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே உடனடியாக உயரதிகாரிகள் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.