மேலும் அறிய

வார்ப்பிரும்பின் உறுதிபோல் 10 வயதில் நீதிக்கதைகள் புத்தகம் எழுதி வெளியிட்ட தஞ்சை மாணவி

பறவைகள் மழையின்போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது. ஆனால் பருந்து மட்டும் தான் மேகத்துக்கு மேலே பறக்கிறது. மேலும் மேலும் உயரே பறக்கும் பருந்தை போன்றவர்கள்.

தஞ்சாவூர்: பறவைகள் மழையின்போது ஒரு உறைவிடத்தை தேடி ஒளிகிறது. ஆனால் பருந்து மட்டும் தான் மேகத்துக்கு மேலே பறக்கிறது. அது போல் தான் சாதனையாளர்களும் சோதனைகளையும், தோல்விகளையும் கண்டு துவளாமல் மேலும் மேலும் உயரே பறக்கும் பருந்தை போன்றவர்கள்.

வெற்றியாளர்களுக்கு தேவையான முக்கிய விஷயம்

எதில் இருந்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லையோ அதுவே தவறு என்பது ஆகும். தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்று சாதனையாளர்கள் தெரிந்து வைத்திருப்பதால் எளிதாக வெற்றியை நோக்கி செல்கின்றனர். ஆனால் தோல்வியடைந்தவுடன் துவண்டு விடுபவர்கள் எப்போதும் அதை தாண்டுவது என்பது இயலாத காரியமாகி விடுகிறது. எனவே எந்த தோல்வியையும் ஏற்றுக் கொண்டு அதில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேறுவதே சரியான வெற்றியாளர்களுக்கு தேவையான முக்கியமான விஷயம் ஆகும்.

பெற்றோருக்கு புகழ் மாலை சூட வைத்த தஞ்சை மாணவி

சிறப்பான “நாளை” வேண்டுமானால்... “நேற்றை” விட இன்று இன்னும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் யாருப்பா இந்த சிறுமி என்று அனைவரும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு தஞ்சைக்கும் பெருமையை சேர்த்து, பெற்றோருக்கும் புகழ் மாலை சூட வைத்துள்ளார். யார் அவர் என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு ஒரு சாதனையை பிரமாண்டமாக செய்துள்ளார். அவர் தஞ்சையை சேர்ந்த 10 வயது சிறுமி இனியா. இந்த வயதில் சொந்தக் கற்பனையில் நீதிநெறி கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்து,  புத்தகத்தின் வெளியிட்டுள்ளார் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி..!

வார்ப்பிரும்பின் உறுதிபோல் 10 வயதில் நீதிக்கதைகள் புத்தகம் எழுதி வெளியிட்ட தஞ்சை மாணவி

“இனியாஸ் ஸ்டோரிஸ்” எழுதி சாதனை படைத்த சிறுமி

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை எல்.ஐ.சி. காலனியை சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியின் மகள் இனியா (10). ஆங்கிலத்தில் சொந்த கற்பனையில் 12 நீதிநெறி கதைகள் எழுதி புத்தகமாகப் படைத்துள்ளார். இந்த கதைகளுக்கு ஏற்ற ஓவியங்களையும் இந்த இனியாவே வரைந்துள்ளார். உலகளவில் சிறுவயதில் புத்தகம் எழுதிய முதல் சிறுமி இனியாவாகதான் இருக்கக்கூடும் என பலராலும் பாராட்டுக்களை குவித்து வருகிறார் என்றால் மிகையில்லை. அந்த நீதிக்கதைகளின் பெயரே ‘இனியாஸ் ஸ்டோரிஸ்’ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கதையும், கை வந்த கலையாக ஓவியமும் என கலக்கும் இனியா

சாதனைகள் படைப்பது என்பது இனியாவுக்கு கை வந்த கலையாக இருந்துள்ளது. சிறுவயதிலேயே நீதிநெறி கதைகள் படிப்பதிலும் ஓவியங்கள்   வரைவதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ள இனியா வரைந்த ஓவியங்கள் வீட்டை அழகுப்படுத்துகின்றன. 4-ம் வகுப்பு படித்தபோது  40 நொடிகளில் 60 தமிழ் இலக்கிய நூல்களின்  பெயர்களைக் கூறி,  Kalam's World  ரெக்கார்ட்டில் உலக சாதனையும் படைத்துள்ளார் இனியா. தற்போது 5-ம் வகுப்பு படிக்கும் இனியா தன்னுடைய சொந்த கற்பனையில் ஆங்கில மொழியில் எழுதிய 12 நீதிநெறி கதைகள் தொகுத்து புத்தகமாக வெளியிட்டு ஒரு மாபெரும் சாதனையை செய்துள்ளார்.

எங்கும், எதிலும் என வெற்றிக் கொடி

சிறுவயதிலேயே கதைகள் எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்து புத்தகமாக வெளியிட்டுள்ளதால், இனியா மற்றும் அவரது பெற்றோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கதை, ஓவியம், புத்தக வடிவமைப்பு என்று அனைத்தும் இனியாவின் உழைப்புதான். எங்கும் இனியா, எதிலும் இனியா என்று வெற்றிக் கொடி நாட்டியுள்ளார். 

அம்மா கொடுத்த சப்போர்ட்... ஊக்கம் கொடுத்த அப்பா

இதுகுறித்து இனியா கூறுகையில், 3ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே கதைகள் படிப்பதில் ஆர்வம் காட்டுவேன். எனது பெற்றோர்கள், நல்ல நல்ல கதை அடங்கிய புத்தகங்களை படிப்பதற்கு என்னை அறிவுறுத்தினார்கள். நீதிநெறி கதைகளை அதிகளவில் படித்தேன். 4ம் வகுப்பை முடித்து கோடை விடுமுறையின் போது சொந்தமாகக் கதைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உள்ளது என்று அப்பா, அம்மாவிடம் சொன்னேன். இருவரும் என்னை ஊக்குவித்தனர்.

வார்ப்பிரும்பின் உறுதிபோல் 10 வயதில் நீதிக்கதைகள் புத்தகம் எழுதி வெளியிட்ட தஞ்சை மாணவி

அதிலும் எனது "அம்மா" தான் நீ நிறையக் கதைகள் எழுது புத்தகமாக அதைத் தொகுக்கலாம் என்று ஊக்கத்தை ஏற்படுத்தினார். பெற்றோர் பேச்சைக் கேட்க வேண்டும். நண்பர்களோடு மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். என்பது போன்ற கதைகளையும் அதற்கான படத்தையும் வரைந்துள்ளேன். நான் யூ.கே.ஜி படிக்கும் போது செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன கெடுதல் ஏற்படும் என்பதைப்  பற்றி பள்ளி மேடையில் பேசியிருக்கிறேன். அதேபோல மொபைல் போன் பயன்படுத்துவதை நான் அதிகம் விரும்ப மாட்டேன். இதெல்லாம் தான் நான் கதை எழுத காரணமாக இருந்தது என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

மொபைல் போன் யூஸ் பண்ண மாட்டாங்க

இதுகுறித்து இனியாவின் ராமகிருஷ்ணனன், ரேவதி ஆகியோர் கூறுகையில், இனியா கோடை விடுமுறையில்தான் நீதிநெறி கதைகளை எழுதினாங்க. எப்பவுமே கதைகள் படிப்பதிலும், ஓவியங்கள் வரைவதிலும் அதிக ஆர்வம் காட்டுவாங்க. மொபைல் போன் யூஸ் பண்ண மாட்டாங்க. இந்த கதைகளை எழுத இரண்டு மாதம் எடுத்துக்கிட்டாங்க. இதில் கதைகள் எழுதுவதைத் தாண்டி, புத்தகமாக அச்சிடப்படும் போது என்ன ஸ்டைல் எழுத்து வரவேண்டும், என்ன கலரில் இருக்க வேண்டும், என்ன சைஸில் இருக்க வேண்டும் என முழுக்க முழுக்க புத்தகம் இனியாவின் கற்பனையிலேயே உருவானது.

பாப்பாவோட புத்தகத்திற்கு தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் இறையன்பு சார் தான் பரிந்துரை செஞ்சாங்க. அது மட்டும் இல்லாம இத்தாலியில் நடந்த புத்தகக் கண்காட்சியிலும் மூன்று நாட்கள் இனியாவின்  புத்தகம் இடம்பெற்றது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதியவை படைக்கும் போதுதான் திறன் வளரும்

தனித்திறன் அனைவரிடமும் மறைந்துதான் இருக்கிறது. சூழ்நிலை, நேரம், வயதுக்கு ஏற்ப அவை வெளிப்படும் போதுதான் சாதனை என்ற இலக்கை எட்ட முடிகிறது. பிற சாதனையாளர்களை நம் பக்கம் திருப்ப முடிகிறது. புதியவை படைக்கும் போதுதான் திறன் வளரும். எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும். வெற்றி என்பது எளிதானதல்ல. விடாத முயற்சியும், தளராத தன்னம்பிக்கையும் வார்ப்பு இரும்பு போல் இறுகி, வலுவாகும் போதுதான் வெற்றியின் சிகரம் நோக்கி நடை போட இயலும். அப்படிதான் வெற்றியின் சிகரத்தை தொட்டுள்ளார் இனியா. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget