சிவசேனா மாநில துணை தலைவருக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார்
’’கடந்த 10 ஆம் தேதி, சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில், இந்துக்களுக்கு ஆதரவாகவும் கடுமையாகவும் பேசினேன்’’
![சிவசேனா மாநில துணை தலைவருக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார் Thanjavur: Shiv Sena state leader received death threats - Security complaint lodged with police சிவசேனா மாநில துணை தலைவருக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு கேட்டு போலீசில் புகார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/14/b8c387e3a984255eb23ae069d19c167c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் புலவஞ்சி போஸ் (எ) குபேந்திரன். இவர் சிவசேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், காவிப்படை என்ற அமைப்பையும், தமிழக இந்து பரிவார் அமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி 8 மணி அளவில் புலவஞ்சி போஸ் செல்போன் எண்ணிற்கு எதிர்முனையிலிருந்து 7094854167 என்ற எண்ணில் இருந்து போன் வந்தது. அதில், வெவ்வேறு விதமான மூன்று குரலில், மூன்று நபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியும், எனது வீட்டின் மேல் குண்டு வீசுவேன் என்று சொல்லி எனது வாகனத்தின் மீது குண்டு வீசுவேன் என்றும், வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே, கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரையும் கைது செய்து எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்து அமைப்பின் நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, புலவஞ்சி போஸ் கூறுகையில், இந்து அமைப்புகளுக்காகவும், இந்து மக்களுக்காகவும், தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகின்றேன். இந்துக்களுக்கோ, இந்து மக்களுக்கோ எங்கு பிரச்சனை என்றாலும் உடனடியாக சென்று குரல் கொடுப்பேன். கடந்த 10 ஆம் தேதி, சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில், இந்துக்களுக்கு ஆதரவாகவும் கடுமையாகவும் பேசினேன். அதில், இந்துக்கள் தான் வாழனும், இந்துக்கள் தான் ஆளனும் என்று பேசினேன். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும், பசுவதை செய்வதை தடை செய்யவேண்டும். மத மாற்றம் தடை சட்டம், ஜனவரி 26ஆம் தேதி குடியரசுதினவிழாவின் போது கச்சத்தீவு மீட்பு போராட்டம் உள்ளிட்ட இந்து மக்களுக்காக போராடி வருகின்றேன்.
எனது வாழ்க்கை முழுவதும் போராட்டமாக இருந்து வருகின்றது. எனக்கு கொலை மிரட்டல் விடுத்து குண்டு வீசிவேன் என்றும், தகாத வார்த்தைகளால் பேசியது குறித்து மதுக்கூர் காவல் நிலையத்திற்கு, எனக்கு பேசிய மர்ம நபர்கள் பற்றி போலீசாரிடம் தெரிவித்தேன். இதனையறிந்த போலீசார் எனது வீட்டிலேயே வந்து புகாரைபெற்று கொண்டு சென்றுள்ளனர். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தப்படும் என்ற உத்தரவாதம் அளித்துள்ளனர். மர்ம நபர்களை பிடித்து, அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள், பின்புலம் உள்ளவர்கள் யார், வேறு யாராவது இவர்களை இயக்குகின்றார்களா என்று போலீசார் விசாரிக்க வேண்டும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)