மேலும் அறிய

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட தஞ்சை வாலிபர்: யார் இவர்?

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணிக்கு தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

முடியாதென்ற முடிவு நம் வாழ்க்கையை முடமாக்கும். முடியுமென்ற தீர்வு நம் சாதனையை திடமாக்கும். முனகுகிறவனுக்கு எந்நாளும் விடியாது என்பது நிதர்சனமான உண்மை. பாசி பிடித்த படிக்கட்டு வழுக்குவது மாதிரி அவநம்பிக்கை உள்ள மனம் வாழ்வை பின்னோக்கி வழுக்கித் தள்ளுவது உண்மைதானே.  

எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த மாற்றுத்திறன் படைத்த சாதனையாளர்கள் நம்மை எப்போதும் வியக்க வைக்கின்றனர். பல நேரங்களில் தங்கள் வேகத்தாலும், விவேகத்தாலும் நம்மை இயக்கவும் வைக்கிறார்கள். நம்பிக்கை இழக்காத சாதனை படைத்த மகத்தான மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் நம்பிக்கை அடையாளங்களாகத் திகழ்கிறார்கள். சவால்விடும் தன் உடலோடு சமூகம்தரும் சவால்களையும் மனஉறுதியோடு எதிர்கொள்பவர்களை நாம் மரியாதையோடுதான் பார்க்கவேண்டும். அவர்களின் முயற்சிகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். நம்மால் சாதிக்க முடியாததையும் அவர்கள் சாதிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வில்வராயன்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (27). சிவில் பி.இ. முடித்துள்ளார். மாற்றுத்திறனாளி ஆன இவருக்கு பிறந்தது முதல் இடதுகை பாதிப்பு இருந்துள்ளது. இவரது தந்தை பழனி கூலித்தொழிலாளி. காலமாகி விட்டார் இவரது தாய் விஜயா தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தன்னிடம் இருக்கும் குறையை பொருட்படுத்தாத பாலச்சந்தருக்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் மீது தணியாத தாகம். இதனால் தீவிரமாக பயிற்சிகள் மேற்கொண்ட பாலச்சந்தர் உள்ளூர் அளவில் நடந்த பல போட்டிகளில் வெற்றி பெற்று தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு உறுதுணையாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செயல்பட்டனர்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட தஞ்சை வாலிபர்: யார் இவர்?

தன் திறமைகளை வளர்த்துக்கொண்ட பாலச்சந்தர் கடந்த 2022ம் ஆண்டு காங்கேயத்தில் நடந்த தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி தேர்வில் விளையாடினார். இதில் 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து தேர்வு பெற்றார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் நடப்பாண்டில் தமிழ்நாடு அணியில் ஏ பி சி என பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 54 பந்துகளில் 114 ரன்கள் குவித்து அனைவரது பார்வையும் தன் பக்கம் திருப்பினார். இந்த சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்று தன்னை நிரூபித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். புனேவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று அசத்தினார்.

இதேபோல் கோயம்புத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு ஏ-பி அணிகளுக்கு இடையிலான மோதலில் 30 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து சாதித்தார். இவ்வாறு பல போட்டிகளில் பங்கேற்று விருது மற்றும் கோப்பைகளை பாலசுந்தர் வென்றுள்ளார். இந்நிலையில் ஆக்ராவில் தேசிய அளவில் நடக்கும் இந்தியா- நேபாள் மாற்று திறனாளிகளுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க பாலச்சந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல் முறையாக இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்காக தேர்வு பெற்றுள்ள பாலச்சந்தருக்கு கிராம மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget