மேலும் அறிய

தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

’’நெல்மூட்டைக்கு 40 லஞ்சமாக கேட்பதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மூட்டையும் 2 கிலோ கூடுதலாக எடை வைப்பதை தடுக்க வேண்டும் என கூறி முழக்கம்’’

நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து கைவிட வேண்டும்  என்பதை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சாலை மறியல், கொள்முதல் நிலையம் முற்றுகை, காத்திருப்பு மற்றும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் மூட்டைகளை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு வரும் முன்பாக ஆன்லைனில் பதிவு செய்த பின்பு, அவர்கள் குறிப்பிட்ட நாட்களில் நெல்லை கொண்டு வருமாறு கூறிய பின் நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் புதிய நடைமுறையை ஒன்றாம் தேதி  முதல் அமலுக்கு கொண்டு வந்தனர்.

தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

இந்த ஆன்லைன் எனும் புதிய நடைமுறைக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தாலுக்காக்களில் நடைபெற்ற ஆன்லைன் பயிற்சியை விவசாயிகள் புறக்கணித்தனர். இந்நிலையில் 2021-22ஆம் ஆண்டு கொள்முதல் பருவம் தொடங்கியது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய நெல்  மூட்டைகளை, கடந்த 15 நாட்களுக்கு மேலாக மலை போல் குவித்து வைத்துள்ளனர். மழை இரவு நேரங்களில் பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து வந்தனர். எனவே, நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை உடனே திறந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

இந்நிலையில், கொள் முதலுக்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகத்தின் முன்பு, விவசாய சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் நெல் மூட்டைகளை தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தின் உள் பகுதிக்கு சென்று அங்கு தரையில் படுத்து காத்திருக்கும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது,  விவசாயிகள் ஆன்லைன் பதிவு முறையை உடனடியாக கைவிட வேண்டும். மாவட்டம் முழுவதும் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மழை பெய்வதால் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் ஈரப்பதத்தின் அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். நெல்மூட்டைக்கு 40 லஞ்சமாக கேட்பதை கைவிட வேண்டும். ஒவ்வொரு மூட்டையும் 2 கிலோ கூடுதலாக எடை வைப்பதை தடுக்க வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர்.

தஞ்சாவூர்: ஆன்லைன் மூலம் நெல்கொள் முதல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...!

பின்னர் துணை மேலாளர் முத்தையா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தற்போது கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள மூட்டைகளை பழைய முறைப்படி கொள்முதல் செய்யப்படும், எங்கெங்கு நெல் மூட்டைகள் உள்ளதோ அங்கு உடனடியாக திறக்கப்படும் என உத்திரவாதம் வழங்கியதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதே போல்  ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து, பழைய முறையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரத்தநாட்டை அடுத்த செல்லம்பட்டி கடைவீதியில் விவசாயிகள் டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தியும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதே போல் தஞ்சாவூர் அருகே கோவிலூர் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஆன்லைன் பதிவை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுளளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Embed widget