அடேய் அசந்து தூங்கியது ஒரு குத்தமாடா?..கவனமாக இருங்க பயணிகளே - அப்படி என்னதான் நடந்தது?
வைத்தியநாதன் இறங்குவதற்கு ஆயத்தமாக அப்போதுதான் அதிர்சசி காத்திருந்தது. வேறு என்ன அவர் வைத்திருந்த லேப்டாப், செல்போன் இரண்டும் காணாமல் போய்விட்டது.

தஞ்சாவூர்: அடேய் அசந்து தூங்கியது ஒரு குற்றமாடா? பயணியிடம் இருந்து ஓடும் ரயிலில் லேப்டாப், செல்போன் திருடிய வாலிபர் சிக்கியது எப்படி தெரியுங்களா?
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் என்பவரின் மகன் வைத்தியநாதன் (30). இவர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ரயிலில் வந்து வந்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் டிராவல் செய்த அலுப்பில் வந்து கொண்டிருந்த வைத்தியநாதனுக்கு ரயில் செல்லும் வேகத்தில் காற்று குளிர்ச்சியாக வந்ததால் தூக்கம் தாலாட்டியுள்ளது. அப்போது நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ரயில் நின்று புறப்பட்டுள்ளது.
பயண களைப்பில் வைத்தியநாதன் இருக்கையில் அமர்ந்து அசந்து தூங்கிவிட்டார். பின்னர் மன்னார்குடி ரயில் வந்த பிறகு சட்டென்று விழித்துப் பார்த்த வைத்தியநாதன் இறங்குவதற்கு ஆயத்தமாக அப்போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. வேறு என்ன அவர் வைத்திருந்த லேப்டாப், செல்போன் இரண்டும் காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ் பாரதி என்பவரிடம் நடந்த விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். உடன் அவரும் இறங்கி சென்ற பயணிகள் யாராவது லேப்டாப் பேக் வைத்துள்ளார்களா என்று தேட ஆரம்பித்துள்ளார்.
இதற்கு இடையில் ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு வாலிபர் லேப்டாப் பேக்குடன் நின்றுள்ளார். அந்த பேகை பார்த்த வைத்தியநாதனுக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. காரணம் அது அவர் லேப்டாப் பேக் போல் இருந்ததுதான். உடனே சந்தேகம் அடைந்த வைத்தியநாதன் அப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்களின் உதவியை நாடினார். விஷயத்தை கூறி அந்த லேப்டாப் பேக் என்னுடையது. நான் தனியாக சென்றால் தப்பி விடுவான் உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார்.
ஆட்டோ டிரைவர்களும் உடனே களத்தில் இறங்கி அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். தப்பிக்க முயற்சி செய்த அந்த வாலிபர் ஆட்டோ டிரைவர்களின் இரும்பு பிடியால் அடங்கி போய்விட்டார். உடனே அந்த வாலிபரை ரயில்வே போலீசில் வைத்தியநாதனும், ஆட்டோ டிரைவர்களும் சேர்ந்து ஒப்படைத்தனர்.
உடன் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை பிடித்து தஞ்சாவூர் ரயில்வே போலீசில் ஒப்படைத்தார். அப்புறம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணை நடத்த அவர் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த உதயகுமார் (23) என்பதும், வைத்தியநாதனிடம் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் உதயகுமாரை போலீசார் கைது செய்து லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்தனர். இதுபோன்று வெகுதூரம் டிராவல் செய்யும் பயணிகளை குறி வைத்து அவர்களை கண்காணித்து அசந்த நேரம் பார்த்து உடமைகள், பணம், செல்போன் போன்றவற்றை அபேஸ் செய்து விடுகின்றனர். எனவே கவனமாக இருங்க பயணிகளே என்று ரயில்வே போலீசார் அட்வைஸ் செய்கின்றனர்.
தாலாட்டும் காற்றுக்கு அசந்து தூங்கிய வைத்தியநாதனுக்கு நேரம் நல்ல நேரம் போல். அதனால்தான் திருட்டு போன லேப்டாப்பும், செல்போனும் கிடைத்துள்ளது. இதுபோன்று ரயில்களில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் பயணிகளை அச்சப்படவே வைத்து வருகிறது.

