மேலும் அறிய

ஆபரேஷன் இல்லாமல் இருதய குறைப்பாட்டை சரி செய்து டாக்டர்கள் சாதனை: தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் பெருமிதம்

பிறவியிலேயே இருதய குறைபாடு இருந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய குறைப்பாட்டை தஞ்சை மருத்துவக்கல்லூரி இருதய பிரிவு டாக்டர்கள் சரி செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: பிறவியிலேயே இருதய குறைபாடு இருந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய குறைப்பாட்டை தஞ்சை மருத்துவக்கல்லூரி இருதய பிரிவு டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இதற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

டாக்டர்களை பாராட்டிய மருத்துவக் கல்லூரி முதல்வர்

இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர்களை பாராட்டி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளுக்கு மலர்ச்செண்டு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பிறவியிலேயே இருதய குறைபாடு  உள்ள குழந்தைகளுக்கு காயில் வைத்து குறைபாட்டை சரி செய்யப்பட்டது. இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் இருதய பிறவி குறைபாடு atrial septal குறைபாடு ASD - Intra Cardiac உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் (Spring ) வைத்து இருதய குறைப்பாட்டை சரி செய்யும் முறையில் மூன்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உட்செலுத்தி கதிரியிக்க ஆய்வுகூடத்தில் 2019 ஆம்ஆண்டிலிருந்து இதுவரை 9400க்கும் மேற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்பிற்கு உடனடியாக (ஒரு மணி நேரத்திற்குள்) செய்யும் சிகிச்சை 1437, இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் 2428 சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இருதய துடிப்பு குறைவான நோயாளிக்கு 48 நிரந்தர இருதய துடிப்பு கருவி, 153 தற்காலிக இருதய துடிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் பிறவியிலேயே இருதய குறைபாடு (PDA - Extra Cardiac) குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காயில் வைத்து குறைபாட்டை சரி செய்யப்பட்டது. இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் இருதய பிறவி குறைபாடு atrial septal குறைபாடு ASD - Intra Cardiac உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் (Spring ) வைத்து இருதய குறைப்பாட்டை சரி செய்யும் முறையில் மூன்று நோயாளிக்கு (59வயது, 39 வயது, 4வயது) சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இலவசமாக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது. இச்சிகிச்சை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் பாலாஜிநாதன் மற்றும் மாநில திட்ட மேலாளர் TAEI மருத்துவர் மருது துரை வழிகாட்டுதல்படி இருதய துறை தலைவர் தலைமையில், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் குழந்தைகள் நல துறை தலைவர், RBSK துணையுடன் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி, மருத்துவ நிலைய அலுவலர் டாக்டர் செல்வம், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சாந்தி பால்ராஜ், இருதயவியல் துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஜெய்சங்கர், இதயவியல் பேராசிரியர் டாக்டர். அருண் ஆரோக்கிய ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சாவூர், மருத்துவக் கல்லூரி, இருதய குறைபாடு, பாராட்டு, பெருமிதம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget