மேலும் அறிய

வெள்ளத்தில் சிறுவர்களை காப்பாற்றிய 2 முதியவர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருது

’’சந்தானம் என்பவரின் மனைவி சரோஜா (60) மற்றும் குப்புசாமி மகன் கண்ணையன் (65) ஆகியோர் தனது உயிரை மதிக்காமல் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர்’’

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிய முறையில்  நடந்த குடியரசு தின விழாவில்  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியேற்றினார். நாட்டின் 73 ஆவது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் மாணவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.

இதனால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்  நடைபெறவில்லை. விழாவினை முன்னிட்டு  தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியேற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 54 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

வெள்ளத்தில் சிறுவர்களை காப்பாற்றிய 2 முதியவர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருது

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,  மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

வெள்ளத்தில் சிறுவர்களை காப்பாற்றிய 2 முதியவர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருது

மேலும்,  பாபநாசம் தாலுக்கா, அலவந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் கடந்த 13.1.2022 அன்று கங்காதாரபுரம் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, நீரில் முழ்கினர். அப்போது சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரின் மனைவி சரோஜா (60) மற்றும் குப்புசாமி மகன் கண்ணையன் (65) ஆகியோர் தனது உயிரை மதிக்காமல் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். இதில் 14 வயதுடைய ஒரு சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான்.  முதியவர்களான இருவரும், சிறுவர்களை காப்பாற்றியதற்காக, வீரதீர செயலுக்கான முதல்வர் விருது வழங்கப்பட்டது.பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய மூதாட்டி சரோஜா மற்றும் முதியவர் கண்ணையன் ஆகியோருக்கு வீரதீர செயல்களுக்கான முதல்வர் விருதை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

வெள்ளத்தில் சிறுவர்களை காப்பாற்றிய 2 முதியவர்களுக்கு வீரதீர செயல்களுக்கான விருது

கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடியேற்றி, இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் திருவையாறு துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், டிஐஜி கயல்விழி, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வர் ரவிக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் முத்துச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!

Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு

ABP Premium

வீடியோ

Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடிநிர்மலாவை சந்தித்த திமுகவினர்ஸ்டாலின் கணக்கு என்ன?பின்னணியில் அதானி?TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
OPS ADMK: ஓபிஎஸ் பக்கம் காத்து, அடித்தது ஜாக்பாட் - இரட்டை இலை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Maharashtra CM: தேவேந்திர பட்னாவிசுக்கு அடித்தது ஜாக்பாட்! மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை பதவியேற்பு!
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Harbhajan Singh : ”பேசி 10 வருஷம் ஆச்சு!” தோனி கிட்ட என் லிமிட் இதான்.. ஹர்பஜன் பகீர் பேச்சு
Sukhbir Badal Attacked: சீக்கிய தலைவர், பஞ்சாப் முன்னாள் துணை சிஎம் மீது பொற்கோயிலில் துப்பாக்கிச் சூடு- என்ன காரணம்? சுட்டவர் யார்?

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது யார்..?...  ‘இதை அண்ணாமலை சொன்னால் நன்றாக இருக்கும்’

Mesham New Year Rasi Palan: காதல் வெற்றி, பண யோகம்! 2025ல் கலக்கப்போகும் மேஷ ராசி - முழு பலனை பாருங்க

Sukhbir Singh Badal: நாடே பதற்றம் - பொற்கோயில் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு, முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங்கிற்கு என்னாச்சு?

Embed widget