மேலும் அறிய

டிச 23இல் அக்னி குண்டத்தில் தீமூட்டி சூர்யா படத்தை எரிக்கும் போராட்டம் - வன்னியர் சங்கம் அறிவிப்பு

சூர்யா வெளிப்படையாக அறிவித்துவிட்டு வந்தால், 10 லட்சம் வரைவோலை பரிசு வழங்கப்படும். அப்போது, வன்னிய இனத்தை சேர்ந்த ஆண்கள் காலனியால் அடிப்பார்கள், பெண்கள் சானிப்பாலை கொண்டு முகத்தில் வீசுவார்கள்

வன்னியர்களின் 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தடை ஆணை பெற்று  இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரியும்,  வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும் வன்னியர் சங்க தலைவராக இருந்து மறைந்த ஜெ.குருவையும் இலிவுப்படுத்திய  ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்  ஆகியோர் மருத்துவர் ராமதாசை பற்றி அவதூறு பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பசும்பொன் பாண்டியனை ஆகியோர் மீது காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் அரசூர் ஆறுமுகம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் அசி.பன்னீர் செல்வம், கட்டுமான தொழிற் சங்க தலைவர் பந்தல்.கனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

டிச 23இல் அக்னி குண்டத்தில் தீமூட்டி சூர்யா படத்தை எரிக்கும் போராட்டம் - வன்னியர் சங்கம் அறிவிப்பு

இறுதியில் தஞ்சை மாநகர செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில் இக்கூட்டத்தில் 15 பெண்கள் உள்பட 300  மேற்பட்டோரரை போலீசார் கைது செய்தனர். இப்போராட்டத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால், தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ம.க.ஸ்டாலின், நடிகர் சூர்யாவை பற்றிய கடுமையாக பேசியுள்ளதால், ஜெய்பீம் படத்தின் பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து ம.க.ஸ்டாலின் கூறுகையில்,ஜெய் பீம் திரைப்பட குழுவினரை கைது செய்ய கோரி நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து தமிழகமெங்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

டிச 23இல் அக்னி குண்டத்தில் தீமூட்டி சூர்யா படத்தை எரிக்கும் போராட்டம் - வன்னியர் சங்கம் அறிவிப்பு

அமைதியாக மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி, நாட்டில் அமைதியை சீர்குலைப்பதை தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட வன்னியர் வசிக்கும் கிராமங்களில்  ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் ஒன்று திரட்டி, அக்னி குண்டத்தில், தீயை வளர்த்து, கூத்தாடியான நடிகர் சூர்யாவின் உருவ படத்தை எரிப்போம்.  அந்த போராட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்துபவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிராமதாஸ் ஆகியோர், அக்னி கும்பம் படம் பொறித்த அரை தங்கத்தினாலான பவுன் தங்க டாலர்  பரிசாக வழங்கப்படும். அதேபோல் தஞ்சை மாவட்டத்திற்கு கூத்தாடியான நடிகர் சூர்யா,  எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு வந்தால், 10 லட்சம் வரைவோலை பரிசு வழங்கப்படும். அப்போது, வன்னிய இனத்தை சேர்ந்த ஆண்கள் காலனியால் அடிப்பார்கள், பெண்கள் சானிப்பாலை கொண்டு முகத்தில் வீசுவார்கள் என்றார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
EB Price Hike: மீண்டும் மீண்டுமா? ஜூலை 1 முதல் மின்கட்டண உயர்வு? உடனே கைவிடக் கோரிக்கை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
Summer Camp: ப்பா.. என்னா வெயிலு; 1500 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கோடைச் சுற்றுலா! அசத்தும் கல்வித்துறை!
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க - நடிகர் விஷால் சொல்வது எதை தெரியுமா?
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
இறந்தவர்கள் பெயரில் பட்டா.. உங்க பெயரில் மாற்ற வேண்டுமா.. கவலைய விடுங்க இது தான் வழி !
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
Indis MPs Team: பாகிஸ்தானை நாறுநாறா கிழிக்கிறோம் - எந்த எம்.பி., குழு எந்த ஊருக்கு? 59 பேர், 33 நாடுகள் - கனிமொழி?
கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?
கனவு நினைவாகுமா? வீடு கட்டுவதில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கும் நடுத்தர குடும்பத்தினர் காரணம் என்ன?
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
Lufthansa flight: ஷாக்.. வானில் மயங்கிய விமானி, ஆளில்லாமல் பறந்த ஏர்பஸ் விமானம் - அந்தரத்தில் 200 பயணிகள்
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
சமாதான புறாவாக மாறும் ட்ரம்ப்.. நாளை புதினுடன் சந்திப்பு! முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?
Embed widget