என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள சூப்பர் அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தகுதியான வாலிபர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற்று தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ளலாம்.

தஞ்சாவூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் ட்ரேடு மற்றும் கிராஜுவேட் அப்ரண்டிஸ் பிரிவில் 1101 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு இல்லை. மெரிட் பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2025. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடன் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் தமிழகம் மற்றும் புதுச்சேரி இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ட்ரேடு அப்ரண்டிஸ் மற்றும் கிராஜுவேட் அப்ரண்டிஸ் பிரிவுகளில் மொத்தம் 1101 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது. மெரிட் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
ட்ரேடு மற்றும் கிராஜுவேட் பிரிவுகளின் விவரங்கள்
இந்த 1101 காலியிடங்களில், ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கான ட்ரேடு அப்ரண்டிஸ் பயிற்சிக்கு மட்டும் 787 காலியிடங்கள் உள்ளன. இதற்கு மாதம் ரூ.10,019/- உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல், இளங்கலை பட்டதாரிகளான B.Sc, B.C.A, B.B.A, B.Com, B.Pharm, B.Sc. (Nursing) முடித்தவர்களுக்கான கிராஜுவேட் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு 314 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம் ரூ.12,524 முதல் ரூ.15,028/- வரை உதவித்தொகை கிடைக்கும். விண்ணப்பிப்பவர்கள் 2021 முதல் 2025 வரையிலான ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.in மூலம் அக்டோபர் இன்று 06, 2025 காலை 10 மணி முதல் அக்டோபர் 21, 2025 மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.
ஆன்லைன் பதிவு செய்த பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும். அந்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து, அக்டோபர் 27, 2025 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேராகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்:
முகவரி: பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி இந்தியா நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி - 607803.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான கால அவகாசம் குறைந்தபட்சமே உள்ளது. எனவே, ஆர்வமுள்ள இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்கள் பட்டியல் வெளியீடு 10.11.2025 வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு 17.11.2025 முதல் 20.11.2025 வரை நடக்கும். பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு 03.12.2025 அன்று வெளியிடப்படும். பின்னர் பயிற்சிக்குச் சேர்ப்பு 08.12.2025 அன்று நடக்கும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த தகுதியான வாலிபர்கள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, மத்திய அரசு நிறுவனத்தில் பயிற்சி பெற்று தங்கள் எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும். அதில் உள்ளவற்றை தெளிவாக படித்து அதன் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள். இன்னும் சில நாட்களே உள்ளதால் அருமையான இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.




















