மேலும் அறிய

திருவாரூர் நுகர்வோர் கூட்டத்தில் பரபரப்பு - நடந்தது என்ன?

திருவாரூரில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் கருத்தரங்கில் கெட்டுப்போன பானம் வழங்கப்பட்டதால் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக் பானம் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சில தினங்களுக்கு முன் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும்  உலக நுகர்வோர் உரிமைகள் தினம் சார்பில் நுகர்வோர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கு பெற்ற கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த கருத்தரங்கில் நுகர்வோர் அமைப்புகளை சார்ந்தவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். முன்னதாக நலத்திட்ட உதவிகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற கட்டுரை கவிதை ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 
மேலும் அயோடின் உப்பை கண்டறியும் பரிசோதனை மற்றும் கலப்படத்தை கண்டறியும் வகையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் காப்பித்தூள், மஞ்சள் தூள் போன்றவற்றை கலப்படம் இல்லாத மற்றும் கலப்படத்துடன்  உள்ளவை இரண்டும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவருக்கும் மில்க் ஷேக்  பானம் மற்றும் இனிப்பு கார வகைகள் வழங்கப்பட்டன. ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, பாதாம் என மூன்று ஃப்ளேவர்களில் மில்க் ஷேக் பானம் வழங்கப்பட்டது. இதில் பாதாம் மில்க் ஷேக் மட்டும் கெட்டுப் போய் இருந்தது. அதனை திறக்கும் போது  நுரை பொங்கி வந்ததுடன் உள்ளே திரிந்த நிலையிலும் இருந்தது. மேலும் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்த ஒருவர் எடுத்து வந்த பாதாம் மில்க் ஷேக் திடீரென்று வெடித்தது. இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
 
குறிப்பாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கில் வழங்கப்பட்ட மில்க் ஷேக் பானம் கெட்டுப் போய் இருந்த சம்பவம் என்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 
 
 
 

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget