மேலும் அறிய

EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸை விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர். அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.?

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக குறித்தும், காங்கிரஸ் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசும்போது, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல தமிழ்நாட்டில் காங்கிரஸ் பரிதாபமான நிலையில் உள்ளது என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர். அவர் என்ன பதிலடி கொடுத்துள்ளார் என்பதை இப்போது பார்க்கலாம்.

“'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' அதிமுகவிற்கே கச்சிதமாக பொருந்தும்“

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், “'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, இரட்டை இலையை வைத்துக் கொண்டே டெபாசிட் இழந்து வரும் அதிமுகவிற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும்! ​மத்தியில் பாஜகவிற்கு அடிமையாக இருந்துவிட்டு, இப்போது கொள்கை பேசும் இபிஎஸ்-ன் இரட்டை வேடத்தை மக்கள் அறிவார்கள். எங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியை முதலில் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எடப்பாடியாரே!“ என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் மீது எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம் என்ன.?

முன்னதாக, சேலத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, 60 நாட்களில் தவெக ஆட்சி செய்த சாதனைதான் என்ன என கேள்வி எழுப்பியதோடு, முதலமைச்சர் போல விஜய் பேசவில்லை என்றும், 4ம் தர நபர்கள் போல அவர் பேசுவதாகவும் விமர்சித்தார். மேலும், கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் வரைதான் தவெக ஆட்சி நிலைக்கும் என்றும், முரண்பட்ட கருத்துக்கள் சொல்லும் கட்சிகளின் ஆதரவோடுதான் இந்த ஆட்சி நடக்கிறது என்றும் தெரிவித்தார்.

அதோடு, 2 திராவிட கட்சிகளும் சரியில்லை என்று சொன்ன விஜய், தற்போது திராவிட கட்சியின் ஆதரவோடு வெற்றி பெற்ற கூட்டணி கட்சியினர்களின் ஆதரவோடுதான் தவெக ஆட்சி நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தலுக்கு பிறகு ஒரு பேச்சு என முதல்வர் விஜய் பேசுகிறார். திமுக, அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சித்தது என்பது கட்டுக்கதை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போலத்தான் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் பரிதாபமான நிலையில் உள்ளது“ என்று அவர் விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், “திமுக ஆதரவில் வெற்றி பெற்று தற்போது தவெகவுடன் இணைந்து காங்கிரஸ் அதிகாரத்தை பெற்றுள்ளது. சினிமாவில் புதுமை படைப்பது போல விஜய் சினிமாவில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அரசு பதவி வழங்கி வருகிறார். அரசாங்கம் என்பது சினிமா மாதிரி கேலி கூத்தாகி விட்டது.“ என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget