மேலும் அறிய

பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்

பசுமையை பாதுகாப்பதுடன், உயிருக்கு ஆபத்தான மரங்களை அறிவியல் அடிப்படையில் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் எந்த நேரத்திலும் விழும் அபாயம்த்தில் உள்ள பட்டுப்போன மரத்தால் பள்ளி மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை உடன் வெட்டி அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் நகரை ஒட்டியுள்ள நாஞ்சிக்கோட்டை சாலை, மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். எப்போதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் இந்தச் சாலையில், சண்முகா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக நின்று வரும் ஒரு பழமையான மரம் தற்போது முழுமையாக பட்டுப்போய், எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த மரம் கடந்த சில மாதங்களாக முற்றிலும் காய்ந்து உயிரற்ற நிலையில் காணப்படுவதாகவும், அவ்வப்போது அதன் கிளைகள் முறிந்து கீழே விழும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பெரிய விபத்து நடைபெறும் முன்பே சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த அபாயகரமான மரத்தின் அருகிலேயே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தினமும் காலை பள்ளி தொடங்கும் நேரத்திலும், மாலை பள்ளி முடியும் நேரத்திலும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

மாணவர்கள் மரத்தின் அடிப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். பலத்த காற்று அல்லது மழை பெய்யும் நேரங்களில் மரம் முறிந்து விழுமோ என்ற பயம் காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு நாளும் கவலையுடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாஞ்சிக்கோட்டை சாலை தஞ்சாவூரின் முக்கிய இணைப்புச் சாலையாக விளங்குகிறது. வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இத்தகைய பரபரப்பான சாலையில் பட்டுப்போன மரம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களிலும் மழைக்காலங்களிலும் இந்த ஆபத்து மேலும் அதிகரிக்கும் என பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த மரத்தின் உலர்ந்த கிளைகள் அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை உரசி நிற்பதாக கூறப்படுகிறது. பலத்த காற்று வீசும் நேரங்களில் கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்தால் மின் விபத்து, மின்தடை அல்லது உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த மரத்தின் உலர்ந்த கிளைகள் பலமுறை முறிந்து கீழே விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் பெரிய விபத்து நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "இந்த மரம் பல மாதங்களாக பட்டுப்போய் நிற்கிறது. தற்போது முழுமையாக காய்ந்து எந்த நேரத்திலும் வேரோடு சாய்ந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் உயிரைப் பணயம் வைத்து இந்த வழியாகச் செல்கின்றனர்.

சிறிய கிளைகள் கூட அடிக்கடி முறிந்து விழுகின்றன. பெரிய விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே அதிகாரிகள் இந்த மரத்தை பாதுகாப்பாக அகற்றி அசம்பாவிதங்களைத் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி, மின்வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரம் உயிரற்ற நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டால், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி அதை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதேநேரத்தில், வெட்டப்படும் மரத்திற்குப் பதிலாக அதே பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பசுமையை பாதுகாப்பதுடன், உயிருக்கு ஆபத்தான மரங்களை அறிவியல் அடிப்படையில் அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் இனியும் காலதாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, இந்த அபாயகரமான பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
மனைவி கொலைக்கு பழிக்குப் பழி !! நீதிமன்ற வாசலில் கூலிப்படை ஏவிய கணவன்
மனைவி கொலைக்கு பழிக்குப் பழி !! நீதிமன்ற வாசலில் கூலிப்படை ஏவிய கணவன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget