மேலும் அறிய

CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?

சிபாரிசு கேட்டு எந்த கூட்டணி கட்சியினரும் தன்னை அணுகக்கூடாது என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. 108 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றதால் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. 

சிபாரிசுக்கு வரும் கூட்டணி கட்சி:

ஆட்சி மாற்றம் நடந்தது முதலே அதிகாரிகள் மாற்றம் அடிக்கடி நடந்து வருகிறது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக விஜய் இருந்து வரும் சூழலில், தற்போது கீழ்மட்டத்தில் பல இடங்களில் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளதாக தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகள் வருகிறது. 

கறார் உத்தரவு போட்ட விஜய்:

அதேசமயம், கூட்டணி கட்சித்தலைவர்கள், சில அமைச்சர்கள் வாரியத் தலைவர் பதவி, சில முக்கிய பதவிகளுக்கு சிபாரிசுகளுடன் விஜய்யை அணுகியுள்ளனர். அவ்வாறு அணுகியவர்களுக்கு முதலமைச்சர் விஜய் கறாராக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 

அதாவது, சிபாரிசுக்காக எந்தவொரு அமைச்சரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் தன்னிடம் வரவே கூடாது என்பதே அந்த உத்தரவு ஆகும். விஜய்யின் இந்த உத்தரவால் கூட்டணி கட்சியினர் பலரும் அதிருப்தியில் உறைந்துள்ளனர். இதனால், விஜய்யிடம் தேவையில்லாத விவகாரங்களுக்காக அணுகுவதையும் தவிர்ப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பணியிட மாற்ற முயற்சி:

மேலும், கடந்த காலங்களில் பணியிட மாற்றத்திற்காக பணத்தைக் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள் போல, இந்த ஆட்சியிலும் அதேபோல பணம் மூலமாக பணியிட மாற்றத்திற்காக சில அதிகாரிகள் மூலமாக காய் நகர்த்தியுள்ளனர். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதா கவே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போதும் நியமனத்தில் உள்ள பல துறைகளின் செயலாளர்கள் மீது கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள், கட்சிக்கும் கறார் உத்தரவு

விஜய்யின் இந்த கறார் முடிவால் சிபாரிசு கனவுடன் இருந்தவர்கள் தற்போது கதிகலக்கத்தில் உள்ளனர். மேலும், தவெக-வினர் யாரும் சிபாரிசு அளவில் அமைச்சர்கள் யாரையும் அணுகக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு பறந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து அருண் மாற்றப்பட்டதும் விஜய்யின் அதிரடிக்கு ஒரு சிறந்த உதாரணமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளில் வழங்கப்பட்ட டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் விஜய் காய் நகர்த்தி வருவதால் அந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் தற்போது அச்சத்தில் உள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget