தஞ்சாவூரில் திருநங்கைகள் ரேஷன் கார்டுகள் பெற சிறப்பு முகாம்
’’திருநங்களாக மாறி வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் ஆதார் அட்டையை பெற்றோர் தர மறுக்கின்றனர்; இதனால் எங்களால் ரேசன் கார்டு பெற முடியவில்லை’’
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1,200 திருநங்கைகள் உள்ளனர். இவர்களில் சுமார் 50 பேர் மட்டுமே ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் சார்பில், தஞ்சாவூர் வட்டத்துக்குட்பட்ட திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகிணி தலைமையில் 30 பேர் தங்களுக்கு ரேஷன் கார்டு வழங்குமாறு அதற்கான விண்ணப்பத்தை, வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜிடம் வழங்கினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச பெருவிழா கொடியேற்றம்
அப்போது திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகிணி கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். ஆனால் குறைந்த அளவிலேயே ரேஷன் கார்டு பெற்றுள்ளனர். ரேஷன் கார்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் என கூறப்படுகிறது. இதனால் நாங்கள் வெளியூர்களுக்கு செல்லும் போதும் பல்வேறு வலை நிமித்தமாக செல்லும் போதும், சலுகைகளை பெறுவதற்கு ரேசன் கார்டு அட்டை கட்டாயம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் ரேசன் கார்டுகள் இல்லாததால், பொருட்கள் வாங்க முடியாமலும், சலுகைகளை பெற முடியவில்லை. இது போன்ற காரண்ங்களால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்க முடியாமல் போய் விடுகிறது. நாங்கள் திருநங்களாக மாறி வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் ஆதார் அட்டையை பெற்றோர் தர மறுக்கின்றனர். இதனால் எங்களால் ரேசன் கார்டு பெற முடியவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் பயனில்லாததால், ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.
எங்களை போன்ற திருநங்கைகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதே போல் பலர் நன்றாக படித்து வருகின்றார்கள். அவர்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அவர்களால் மேற்கொண்டு படிப்பதற்கான வழிகள் இல்லாமல் போய், மாற்றுப்பணிகளில் ஈடுபடுகின்றனர். திருநங்களுக்கு அரசு வழங்கும் ஆவணங்களை வழங்கினால், நாங்களும் சமுதாயத்தில் ஒருவராக வாழ்வோம். பலமுறை மீதமுள்ளவர்களுக்கு ஆவணங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும், மனுக்களும் வழங்கி வந்துள்ளோம். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கொரோனா பரவலை மறந்து பாஜக சார்பில் கபடி போட்டி- சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் கபடி கபடி
இப்போது நாங்கள் வழங்கும் மனுக்களை பெற்று கொண்டு நாங்கள், கேட்கும் ஆவணங்களை வழங்க வேண்டும். சிறப்பு முகாம் மூலம் எங்களுக்கு அரசு ஆவணங்களை வழங்கினால், நாங்களும் மற்றவர்களை போல், உரிய பொருட்களையும், சலுகைகளை பெற்று கொண்டு வாழ்வோம். எனவே ஆதார் அடையாள அட்டைக்குப் பதில், தமிழக அரசால் திருநங்கைகளுக்கு நலவாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக் கொண்டு ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மேட்டூர் அணையின் நீர் வரத்து 2,565 கன அடியில் இருந்து 2,390 கன அடியாக குறைந்தது