மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன்....டெல்லியில் இருந்து ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறையினர்..!
மயிலாடுதுறை அருகே அரபி மொழியில் எழுதப்பட்ட பழமைவாய்ந்த மிகவும் சிறிய அளவிலான குர்-ஆனை தொல்லியல் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை தாலுக்கா நீடூரை சேர்ந்தவர் அமீனுல்லா(60). இவர்களது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நீடூரில் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் வேலை பார்த்தும், வணிகம் செய்தும் வந்துள்ளனர் இவர்கள் குடும்பத்தினர். அமீனுல்லா வீட்டில் மிகவும் பழமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட மிகவும் சிறிய அளவிலான குர்ஆன் ஒன்று மெட்டல் பாக்சில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
தங்களது மூதாதையர்கள் காலத்தில் இருந்து இருக்கும் இந்த குர்ஆன் குறித்து ஆய்வு செய்து எந்த நூற்றாண்டை சேர்ந்தது இதன் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டுமென்று அமீனுல்லா குடும்பத்தினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொல்லியல்துறையினர் இதனை கண்டுகொள்ளாததால் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்து அமீனுல்லா நிருபர்களிடம் கூறுகையில், தங்களது குடும்பத்தினர் 6 தலைமுறைகளாக பாதுகாத்து வந்த மிகச்சிறிய அளவிலான குர்-ஆன் குறித்து தெரிந்துகொள்ள தொல்லியல் துறையை நாடினோம்.
Viral Video: பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை: மீட்கப் போராடும் தாய் யானை - வீடியோ வைரல்!
ஆனால், சரிவர அவர்கள் பதில் அளிக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். குர்-ஆன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. சென்னை மியூசியத்தின் டாக்டர் கண்ணன் என்பவர் ஜெய்புனிஷா என்பவரின் ஆராய்ச்சியைக் கொண்டு இந்த குர்-ஆன் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்திய தொல்லியல்துறை சான்று வழங்கியது.
OPS vs EPS: ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் 'B' டீமாக செயல்படுகிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஆனால், 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த குர்-ஆனை தங்கள் குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர். இதன் வயது அதிகமாக இருக்கும் என்பதால் இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம். தொல்லியல்துறையினர் சரிவர பணிகளை செய்யாததால் அதன்பிறகு 2018-இல் டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த குர்-ஆன் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்று மனு செய்தேன்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லியை சேர்ந்த முன்னாள் தொல்லியத்துறை அதிகாரி டாக்டர் கவாஜா, ரஹ்மான், சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, வெற்றிச்செல்வி ஆகியோர் அடங்கிய குழுவினர் நீடூர் அமீனுல்லா வீட்டிற்கு வந்து சிறிய அளவிலான அந்த குர்-ஆன் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறிச்சென்றுள்ளனர். ஆய்வின் போது மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்