தமிழகம் முழுவதும் செப் 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்
பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழக முழுவதும் செப்டம்பர் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் பயிற்சி பட்டறை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது... நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திணை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போதைய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார் ஆனால் இதுவரை அது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஆகையால் தமிழக முதல்வர் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட இருபது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏழாவது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வித் துறையில் நடைமுறையில் உள்ள அரசாணை 101 மற்றும் 108 தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து தொடக்க கல்வித் துறைக்கு என தனி இயக்கம் ஏற்படுத்தி முழுமையாகவும் சுதந்திரமாகவும் இயங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பதவியை மீண்டும் உருவாக்கி தொடக்கக்கல்வி இயக்குனரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி நிலுவையின்றி அறிவித்த தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்னுரிமை ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பணியிடத்தினை ரத்து செய்து பழைய நிலையிலான பதவி உயர்வு வழி பள்ளி கல்வி இயக்குனர் பணியிடம் தொடர செய்திட வேண்டும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பி.லிட் பி.எட் படித்த நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டு வரும் தணிக்கை தடை நீக்கி பழைய முறையில் ஊக்க ஊதியம் தொடர செய்திட வேண்டும், மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கோடு உயர்கல்வி படித்து பின் அனுமதிக்காக காத்திருக்கும் 6500 ஆசிரியர்களுக்கு பின்னேர்ப்பு வழங்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5% உயர்கல்வி இட ஒதுக்கீடு மற்றும் மூவனூர் ராமாமிர்தம் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி நிலவையின்றி அறிவித்த தேதியில் இருந்து வலங்கிட வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமை படி ஆசிரியர் நியமனங்களை செய்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 20ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரெங்கராஜன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஈவேரா உள்ளிட்ட ஏராளமான சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.