மேலும் அறிய

தஞ்சாவூரில் இருந்து மட்டும் 98 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி

தஞ்சையிலிருந்து 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 98 கோடி மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்

தஞ்சையில் இருந்து 2020-21 ஆம் ஆண்டில்  98 கோடி ரூபாய் மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள என  மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி தெரிவித்துள்ளார். தஞ்சையில், உலக புகழ்பெற்ற கலைத்தட்டு, ஒவியத்தட்டு, தஞ்சாவூர் ஒவியம், நெட்டி மொம்மைகள், தஞ்சாவூர் நெட்டி மாலைகள், நடனமங்கை, தலையாட்டி பொம்மை உள்ளிட்டவைகள் இந்தியா மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் செல்கின்றது. இதற்காக பல்வேறு கைவினைப்பொருட்களுக்கு குறிசார்குறீயீடு பெறப்பட்டுள்ளது.  இத்தகைய கைவினைப்பொருட்களை  உலக சந்தை அளவில் விற்பனை மேலும் உயர்த்தவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

தஞ்சாவூரில் இருந்து மட்டும் 98 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி

தஞ்சையில்  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்ககம் சார்பில் நடைபெற்ற குறு, சிறு தொழில்முனைவோர்கள், கைவினை கலைஞர்களுக்கான உலகச் சந்தையில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி  பேசுகையில், உயர் தரமாகவும், அழகாகவும் இருக்கும் இந்திய கைவினைப்பொருள்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைவினை பொருள்கள் நம்முடைய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மக்களுக்கு இத்துறை வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டிலும், உலகச் சந்தையிலும் 67,000 ஏற்றுமதியாளர்களை கொண்டுள்ள இத்துறை நாடு முழுவதும் பரவியுள்ளது.

கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, அரபு நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், லத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு கைவினைப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தஞ்சாவூர் மாவட்ட கைவினைப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து மட்டும் 98 கோடி ரூபாய்க்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதி

கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 346 கோடியில் கைவினை பொருள்களின் பங்கு 98 கோடி. தஞ்சாவூரின் ஏற்றுமதி இலக்கை மூன்று ஆண்டுகளில் 500 கோடியாக உயர்த்துமானால், அதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும. உலக அளவில்  கைவினை பொருட்ளை விற்பனை செய்வதற்கு ஏற்றுமதியாளர்கள் முன்வரவேண்டும். அப்போது தஞ்சை கைவினைப்பொருட்களின் விற்பனை உயரும். இதற்காக மத்திய அரசு அனைத்து விதமான நடவடி்கையும் எடுத்து கைவினைப்பொருட்களை விற்பனையை உலக அளவில் செய்வதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் என்றார். இக்கருத்தரங்கத்தில் மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்கக உதவி இயக்குநர் பாக்கியவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget