மேலும் அறிய

விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்லும் ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்

மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே. நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக ஏற்படுத்திய எலைட் ஸ்கூலில் பிளஸ் டூ படித்த மாணவர் இவர்

ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்த சிவபெருமான், தற்போது அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படிப்பதற்காகச் செல்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடிக்கு அருகே உள்ள சிறிய கிராமம் நரசிங்கக்கூட்டம். அந்த ஊரில் 50, 60 வீடுகள்தான் இருக்கும். அந்த கிராமத்திற்கு பஸ் வசதி கிடையாது. அருகில் உள்ள கடலாடிக்குச் செல்ல வேண்டுமானால் 1.5 கிலோ மீட்டர் நடந்துதான் போக வேண்டும். ஊரில் பொருட்களை வாங்க பெட்டி கடைதான் உள்ளது. மருத்துவமனையும் கிடையாது. இப்படிப்பட்ட கிராமத்தில் மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீடு. வீட்டில் கரண்ட் கிடையாது. டி.வி கிடையாது. பெரிய நகரங்களைப் போல ஒளிவீசும் விளக்குகள் இல்லாத அந்த ஊரில் வீட்டுக்கு வெளியே கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு, இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவது தெரியும். பால்வீதி கூட கண்ணுக்குத் தெரியும். சிறுவயதிலிருந்தே இப்படிப் பார்த்து ரசித்த அனுபவம்தான் எம். சிவபெருமானுக்கு விண்வெளி ஆராய்ச்சி மீது தீராத ஆர்வம் ஏற்படச் செய்துவிட்டது.

விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்லும் ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்

மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிவபெருமான், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாலும்கூட தனது விடாமுயற்சியால் சென்னை குரோம்பேட்டை எம்ஐடியில் பிஇ ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்து, பின்னர் கான்பூர் ஐஐடியில் எம்.டெக் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் படித்து விட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பிஎச்டி படிக்கச் செல்கிறார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கே. நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, சிறந்த அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக ஏற்படுத்திய எலைட் ஸ்கூலில் பிளஸ் டூ படித்த மாணவர் இவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்லும் ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்

குறிப்பாக,வாரந்தோறும் அப்போதைய ஆட்சியர் நந்தகுமார் நேரில் வந்து ஊக்கமளித்தது சிவபெருமானுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. ஆசிரியர்களின் ஊக்கத்தினால் பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1086 மதிப்பெண்கள் பெற்றார். இயற்பியலில் 200, கணிதத்தில் 199, வேதியியலில் 198, உயிரியலில் 192 என இவரின் திறமையால் பொறியியல் கல்வியில் சேர 199 கட்ஆப் மதிப்பெண் பெற்றார். இதன்படி குரோம்பேட்டை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி.யில் பி.டெக். ஏரோநாட்டிகல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கவுன்சிலிங்கிற்காக இந்த கல்லூரிக்கு செல்ல வாழ்க்கையில் முதல் ரெயில் பயணம் மேற்கொண்டார். அப்போது இவரை கலெக்டரின் உதவியாளர் கதிரவன், கணித ஆசிரியர் நவநீதகிருஷ்ணனும் ரெயிலில் அழைத்து சென்றபோது நம் கிராமத்தை தவிர வளர்ந்த பெரிய பெரிய விசயங்கள் இந்த உலகில் நிறைய உள்ளது என்பதை முதல் ரெயில் பயணத்தில் சிவபெருமான் கண்ணால் கண்டு வியந்தார்.

விண்வெளி ஆராய்ச்சியில் உயர்கல்வி பயில அமெரிக்கா செல்லும் ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவர்

ஒருவழியாக கல்லூரியில் சேர்ந்தாகிவிட்ட நிலையில், கல்வி கட்டணத்தினை சில நல்இதயங்கள் உதவியதால் கட்டணத்தினை கட்டி பயின்றார். தமிழ்வழியில் பயின்றதால் ஆங்கில வழியில் கல்விகற்க சிவபெருமான் சிரமப்பட்டார். அங்கு ஆராய்ச்சியில் கொண்ட ஆர்வத்தினால் சிவபெருமான் உருவாக்கிய போர் விமானங்கள் மோதலை தடுக்கும் ஆராய்ச்சி திட்டத்திற்கு பல்கலைக்கழகத்தின் நிதி உதவி கிடைத்தது. பி.டெக் முடித்த நிலையில் எம்.டெக் படிக்க பலமுறை முயன்று தோல்வி ஏற்பட்ட நிலையிலும் விடாது முயன்று கான்பூர் ஐ.ஐ.டி.யில் ஏரோ ஸ்பேஸ் பொறியியல் கல்வியை உதவித்தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. அங்கு பேராசிரியர் மங்கல் கோத்தாரி விண்வெளித்துறை ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்கபடுத்தினார். இவ்வாறு எம்.டெக் முடித்ததும் நாசா விண்வெளி ஆராய்ச்சி மைய ஆதரவுடன் இயங்கும் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் பி.எச்.டி. கல்வி படிக்க விரும்பி இருக்கிறார்.

இவரின் ஆர்வத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அங்கு இவர் பி.எச்டி. படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விண்வெளி ஆய்வு துறையில் சிவபெருமான் நுழைந்துள்ளார். அதாவது, சிறுகோள்களைச் சுற்றி செயற்கைகோள்களை எப்படி சிறப்பாக இயங்க செய்ய முடியும் என்று தனது ஆய்வினை சிவபெருமான் மேற்கொள்வதோடு கிரகங்கள் தொடர்பான தனது ஆய்வினை தொடர உள்ளார். ஆரம்பம் முதல் இன்றுவரை ஆட்சியர் நந்தகுமார் உதவியாக இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஏழை மாணவரை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பி உதவி செய்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி படித்து வரும் சிவபெருமான் விசா வந்துவிட்டால் இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார். தனக்கு உதவிய அப்போதைய ஆட்சியர்  நந்தகுமார் மட்டுமல்லாது ஆதரவளித்த ஆசிரியர்கள் மற்றும் நல் உள்ளங்களுக்கு சிவபெருமான் கண்ணீர் மல்க நன்றி கூறுகிறார். கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து அப்போதைய ஆட்சியர் ஒருவர் மூலம் அமெரிக்கா சென்று உயர் கல்வி பயில இருக்கும் இந்த ஏழை மாணவரை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.நாமும் வாழ்த்தலாமே…!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்? 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Embed widget