மயிலாடுதுறையில் சாலை வசதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - போக்குவரத்து பாதிப்பு
மயிலாடுதுறை அருகே சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் நீலப்புலிகள் இயக்கத்தினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேந்தங்குடி, வடபாதி, தென்பாதி, வடக்குத்தெரு பகுதியில் சாலை செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ள சாலையை பத்து ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை அதனை சீரமைக்க வேண்டும், நகரப் பேருந்து மாணவர்கள் காலை பள்ளிக்கு செல்லும் நேரத்தில் நிறுத்தி செல்ல வேண்டும், விபத்துக்களை தடுக்க தங்கள் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
ஆனால் இது தொடர்பாக இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடவாதி, தென்பாதி, வடக்கு தெரு சாலையை அமைத்து தர வேண்டும், விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும், நகரப் பேருந்தை, பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் அதன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை சீர்காழி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை நகர திமுக சார்பில் பேராசிரியர் நூற்றாண்டு விழா - திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி அண்ணா பகுத்தறிவு மன்றத்திலிருந்து பேரணியாக சென்று பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் பேராசிரியர் நூற்றாண்டு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை - 500 மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நலத்திட்ட உதவிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவிலில் திமுக மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் கலந்து கொண்டு 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து கிலோ அரிசி, போர்வை, ஊட்டச்சத்து தரக்கூடிய பத்து வகையான சத்து மாவுகள் மற்றும் ஐநூறு ரூபாய் ரொக்க பணம் வழங்கினர். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியருக்கு மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.