மேலும் அறிய

ABP Nadu Impact : "தஞ்சை மேம்பாலம் எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்" உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தஞ்சை மேம்பாலத்தில் எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர்: ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தஞ்சை மேம்பாலத்தில் எச்சரிக்கை பலகையில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர் நீக்கப்பட்டுள்ளது. 

தஞ்சை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. சாலைகள், பழைய பேருந்து நிலையம், வணிக வளாகம் என்று பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் உலக புகழ் பெற்ற பெரியகோயில், சரஸ்வதி மகால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம் போன்றவை அமைந்துள்ளன. இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தஞ்சைக்கு வந்து செல்கின்றனர். முக்கியமாக வெளியூர், வெளிமாவட்டத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தஞ்சையில் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

வழிகாட்டி பெயர்ப்பலகைகளை விட்டு வையுங்கள்

இவர்கள் எந்தவித சிரமமும் இன்றி குறிப்பிட்ட இடங்களுக்கும், தங்களின் உறவினர்கள் வீடுகளை எளிதாக கண்டறியவும் சாலையோரங்களிலும், தெருமுனைகளிலும் வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பலகைகளில் தெருக்களின் பெயர், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விபத்து நடைபெறும் பகுதி, மெதுவாக செல்ல வேண்டிய பகுதி போன்றவை குறித்தும் வேண்டும் எனவும் எழுதப்பட்டுள்ளன.

ஆனால் இது பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதை போஸ்டர் ஒட்டுபவர்கள் உணர்வதில்லை. முக்கிய சாலைகளில் உள்ள வழிகாட்டி பெயர் பலகைகள் மீது விளம்பர போஸ்டர்கள், ஆபர் நோட்டீஸ்கள், துணிக்கடை விளம்பர நோட்டீஸ் என பல்வேறு நோட்டீஸ்களையும் சிலர் ஒட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரக்கூடிய மக்கள் குழப்பம் அடைந்து திசை தெரியாமல் வழி மாறி செல்கின்றனர்.

போஸ்டர் ஒட்ட வேறு இடமே கிடைக்கலையாப்பா?

தஞ்சை மாவட்டத்திலேயே அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக தஞ்சை பெரியகோயில் அருகே உள்ள மேம்பாலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையின் மீதும் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் கிழிக்கப்பட்டாலும் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் தெரியவில்லை. இதுகுறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்டது. 

செய்தியின் எதிரொலியாக சுத்தமானது

இதையடுத்து எச்சரிக்கை வாசகங்கள் தெரியும் வகையில் அந்த போர்ட்டில் இருந்து போஸ்டர்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதேபோல் சில இடங்களில் வழிகாட்டி பெயர் பலகைகள் உடைந்து காணப்படுகிறது. இப்படி செய்பவர்களுக்கு மனசாட்சி இருக்குமா? இருக்காதா என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. 

மேம்பாலம் எச்சரிக்கை பலகையை சரி செய்தது போல் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள தெரு வழிகாட்டி பெயர் பலகை உடைந்துள்ளது. இதை கயிறால் கட்டி வைத்துள்ளனர். இதேபோல் மானம்புச்சாவடியில் உள்ள தெருவை குறிக்கக்கூடிய வழிகாட்டி பெயர் பலகை கம்பி மட்டும் உள்ளது. தெருவின் பெயர் எழுதப்பட்டிருந்த பலகை எங்கு சென்றது என்றே தெரியவில்லை. இவற்றையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் பிற மாவட்ட, மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் வழி தெரியாமல் தடுமாற மாட்டார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
EPFO ATM Withdrawal Rule: ஆஹா..! இனி ஏடிஎம்-ல் பி.எஃப்., பணத்தை எடுக்கலாமாமே - புத்தாண்டில் மத்திய அரசின் அதிரடி திட்டங்கள்
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
Year Ender 2024: தமிழ்நாடு இல்லாமலா..! ரூ.31.5 லட்சம் கோடி, நாட்டின் பொருளாதாரத்தில் யாருக்கு அதிக பங்கு? யார் முதலிடம்?
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
Virat Kohli: ”வீட்டுக்கு கிளம்புங்க” விராட் கோலி, மீண்டும் அதே மாதிரியா..! கடுப்பான ரசிகர்கள் கடும் விமர்சனம்
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
Embed widget