மேலும் அறிய

மக்களே பணிகள் ஏறத்தாழ நிறைவு... மார்ச் மாதம் ஓப்பனிங்: என்ன விஷயம் தெரியுங்களா?

இந்த மெமு ரயில்கள்  திருச்சி – விழுப்புரம். திருச்சி – மயிலாடுதுறை. மயிலாடுதுறை – சேலம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

தஞ்சாவூர்: திருச்சி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. ஆமாங்க விரைவில் திருச்சி மெமு ரயில் பராமரிப்பு இடம் விரைவில் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வே திருச்சி மஞ்சத்திடலில் அமைக்கப்பட்டு வரும் மெமு (MEMU) ரயில் பராமரிப்பு ஷெட் பணிகளில் ஏறத்தாழ நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது. இந்த ஷெட், வரும் மார்ச் மாதம் 2026க்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திருச்சி ரயில்வே கோட்டத்திலேயே முதல்முறையாக அமைக்கப்படும் மெமு பராமரிப்பு ஷெட் ஆகும்.

சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு வசதி கொண்ட ஷெட் இதுவாகும். இந்த புதிய ஷெட், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மற்றும் அதிவேகமாக இயங்கக்கூடிய மெமு ரயில்களின் சேவையை அதிகரிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக புறநகர் பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த மெமு பராமரிப்பு ஷெட், பொன்மலை ரயில்வே பணிமனைக்கு அருகில் சுமார் 85,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக ரூ.61 கோடியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில், நிர்வாகக் கட்டிடம் மற்றும் மெமு ரயில்களின் கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் இயந்திரப் பராமரிப்பு தேவைகளுக்கான நவீன கருவிக் கடைகளும் அமைக்கப்படும் என்று விபரமறிந்த வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாத மாத நிலவரப்படி, ரயில்களை ஆய்வு செய்வதற்கான பிட் லைன்களின் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நிர்வாகக் கட்டிடப் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளது_ ஷெட்டை பொன்மலை பணிமனையுடன் இணைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாம். இந்த ஷெட் ஒரே நேரத்தில் நான்கு 12-கார் மெமு ரயில்களை நிறுத்தி பராமரிக்கும் வசதியைக் கொண்டிருக்கும் என்று கூறுகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த திட்டத்தை மார்ச் 2026க்குள் முடிக்கும் திட்டத்தில் உள்ளோம். தற்போது கோட்டத்தில் இயக்கப்படும் 36க்கும் மேற்பட்ட டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) ரயில்களை படிப்படியாக மெமு ரயில்களாக மேம்படுத்த முடியும். இதற்காக, இந்த புதிய பராமரிப்பு வசதி மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.

மஞ்சத்திடலில் ஷெட் அமைவதால், திருச்சி கோட்டத்திற்கு மெமு ரயில்களின் ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெமு ரயில்கள் ஆற்றல் சேமிப்பு மற்றும் மீளுருவாக்க பிரேக்கிங் (regenerative braking) வசதிகளை கொண்டது. மேலும் வசதியான இருக்கைகள், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன், சறுக்கு கதவுகள், உயிரி கழிப்பறைகள் (bio-toilets) வசதியை கொண்டு இருக்கும்.

இந்த மெமு ரயில்கள்  திருச்சி – விழுப்புரம். திருச்சி – மயிலாடுதுறை. மயிலாடுதுறை – சேலம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.  இந்த புதிய மெமு ஷெட், திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் ரயில் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதன் மூலம், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதும், ரயில்களின் வேகம் கூடும். இதனால் பயண நேரம் குறையும். மேலும், டீசல் ரயில்களுக்குப் பதிலாக மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும். இத்தகைய திட்டம் திருச்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget