எண்ணெய் கிணறு அமைக்க தளவாட பொருட்களை ஏற்றி வந்த ONGC லாரியை தடுத்து நிறுத்திய மக்கள்
மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் தளவாட பொருட்களை ஏற்றி வந்த ஓஎன்ஜிசி லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமான ஓஎன்ஜிசி நிறுவனம் இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து பல ஆண்டுகளாக கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தால் நிலத்தடி நீர் மண்வளம் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி இம்மாவட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் ஓஎன்ஜிசி செல்லும் என்னை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளில் எண்ணெய் கசிவு ஏற்படும் சம்பவம் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அஞ்சல்வார்த்தலை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டது. அதனை அறிந்த அப்பகுதி மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதனை அடுத்து அந்த திட்டமானது கைவிடப்பட்டது. மேலும் அதற்கான தடவாட பொருட்கள் அங்கேயே பயன்பாடு அன்று இருந்து வந்தது.
watch video | ‛அக்னி சிறகே எழுந்து வா...’ - சமந்தாவை மோட்டிவேட் செய்த ராம் சரண்- வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் இன்று அஞ்சல்வார்த்தலை கிராமத்தில் இருந்த ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை ஓஎன்ஜிசிக்கு சொந்தமான லாரியில் ஏற்றி மயிலாடுதுறையை அடுத்த மல்லியம் மஞ்சளாறு பகுதியில் செயல்படாமல் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் மற்றும் எரிவாயு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை கண்ட மல்லியம் பகுதி மக்கள் அங்கு மீண்டும் புதிய எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான முயற்சியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் தளவாட பொருட்களை ஏற்றி வந்த ஓஎன்ஜிசி லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Justice Abdul Nazeer : ‛மனுதர்மத்தின் புனிதம் குறையாமல் காக்க வேண்டும்’ - உச்சநீதிமன்ற நீதிபதி
இதனையடுத்து தகவல் அறிந்த ஓஎன்ஜிசி துணை மேலாளர் அன்பரசு மற்றும் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சிவார்த்தையை தொடர்ந்து தளவாட பொருட்களை ஏற்றி வந்த லாரி மீண்டும் அஞ்சார்வார்த்தலை கிராமத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
CMDA வில் 30 காலிப்பணியிடங்கள்: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!