CMDA வில் 30 காலிப்பணியிடங்கள்: பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வும் மற்றும் இரண்டாம் தாளில் நடைபெறும் தொழில்நுட்பத் தேர்விற்கு 100 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கணினி வழித்தேர்வு நடைபெறும்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளர்ச்சிக்கானத் திட்டமிடும் முகாமையாகும். கடந்த 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு பணிகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது பொறியியல் பட்டதாரிகளுக்கு அரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் என 30 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான தகுதி? வயது வரம்பு? என முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.
CMDA வின் வேலைவாய்ப்பு விபரங்களின் தகவல்கள்:
உதவி திட்ட அமைப்பாளர் (Assistant Planner):
காலியிப்பணியிடங்கள் – 15
கல்வித்தகுதி - BE (Civil or Highways) or B.Arch படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருந்தப்போதும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500 என நிர்ணயம்
திட்ட உதவியாளர் (Planning Assistant) பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் - 15
கல்வித் தகுதி : BE (Civil or Highways) or B.Arch முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இருந்தப்போதும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500 என நிர்ணயம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் பணிபுரிய விரும்பமுள்ள நபர்கள், http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலமாக வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/SCA/ST பிரிவினருக்கு ரூ 250.
பொது மற்றும் BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு ரூ.500.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட வழிமுறைகளைப்பயன்படுத்தி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழித்தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் தாள் என இருமுறைகளில் நடைபெறும்.
முதல் தாளில் 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வும் மற்றும் இரண்டாம் தாளில் நடைபெறும் தொழில்நுட்பத் தேர்விற்கு 100 மதிப்பெண் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு இத்தேர்வானது நடைபெறும். இத்தேர்விற்கானத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.