மேலும் அறிய
Advertisement
கழிவறை நினைத்து கதவைத் திறந்து பள்ளத்தில் விழுந்த நோயாளி - உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
கழிவறை குழாய்கள் செல்லும் அறையை பூட்டி வைக்காமல் திறந்து வைத்திருந்ததால் கழிவறை என நினைத்து அறைக்குள் சென்ற முதியவர் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அரசு மருத்துவக் கல்லூரியின் அலட்சியப்போக்கால் கழிவறை என நினைத்து கதவைத் திறந்து 20 அடி பள்ளத்தில் விழுந்த நோயாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தெற்கு தானிகோட்டகம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம் 74 வயதான இவர் நேற்று முன்தினம் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். முதல் மாடியில் ஆண்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் இன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக கழிவறைக்குள் சென்று அறையை திறந்து உள்ளார். ஆனால் கழிவறைக்கு பதில் கழிவறை குழாய்கள் கழிவுகள் உள்ள 20 அடி பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்குதுறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உயிருக்கு போராடிய தர்ம லிங்கத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20 அடி பள்ளத்தில் விழுந்ததால் பலத்த காயம் அடைந்த முதியவர் அறுவை சிகிச்சை செய்து அவரது கல்லீரல் மற்றும் மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ கல்லூரி ஊழியர்களின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என குற்றம் சாட்டிய அவரது உறவினர்கள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளியை பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி உள்ளிட்ட பாஜகவினர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனையடுத்து நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பாஜகவினர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கழிவறை குழாய்கள் செல்லும் அறையை பூட்டி வைக்காமல் திறந்து வைத்திருந்ததால் கழிவறை என நினைத்து அறைக்குள் சென்ற முதியவர் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
சென்னை
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion