ஞானரத யாத்திரையை தொடங்கி வைக்க மயிலாடுதுறைக்கு வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு - திரும்பி செல்ல வலியுறுத்தி தருமபுர ஆதீனத்தில் திக, விசிக, மனு
’’ஆர்எஸ்எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல’’
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கரவிழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் வருகிற 19 ஆம் தேதி ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க உள்ளார்.
''பின் சீட்ல நீங்க தொழுகை பண்ணுங்க.. நான் வெய்ட் பண்றேன்..'' மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்!
இந்நிலையில் ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தருமபுரம் ஆதீன மடத்துக்குச் சென்ற அக்கட்சியினர் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இல்லாததால் ஆதீன நிர்வாகத்தில் மனுவை ஒப்படைத்தனர்.
அந்த மனுவில், ஒன்றிய அரசின் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் உணர்வுக்கு எதிராக செயல்படுவதற்காக தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தீரமானங்களுக்கும் ஒப்புதல் தர மறுத்து, தொடர்ந்து கிடப்பில் போட்டு வருகிறார். நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.
எனவே ஆளுநரை திரும்பிச் செல்ல வேண்டும் என கோருகிறோம். இந்நிகழ்ச்சியில் ஆளுநரை வைத்து நடத்த வேண்டாம் என தருமபுரம் ஆதீனத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். பின்னர் அவர்கள்’ செய்தியாளர்களைச் சந்தித்தபோது, எதிர்ப்பை மீறி ஆளுநரை அழைத்து ஆதீன நிகழ்ச்சி நடைபெற்றால் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதில், விசிக மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் மற்றும் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.