PBKS vs SRH, Match Highlights: பேட்டிங்கில் அசத்திய மார்க்ரம், பூரன்... ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
IPL 2022, PBKS vs SRH: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரின் 28ஆவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையின் டிஓய் பட்டீல் மைதானத்தில் போட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷாருக்கான் 26 ரன்களும் எடுத்து இருந்தனர். ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 4 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களும், நடராஜன் மற்றும் சுஜித் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக கனே வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்தில் கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களின் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு, அபிஷேக் சர்மா உடன் இணைந்த திரிபாதி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹைதராபாத் அணியின் ரன் எண்ணிக்கை மெல்ல உயர்ந்தது.
தொடர்ந்து, இருவரும் அடுத்தடுத்து 30 ரன்கள் அடித்து வெளியேற, ஹைதராபாத் அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பிறகு களமிறங்கிய மார்கரம் மற்றும் பூரன் விக்கெட்களை விடாமலும், ரன் எண்ணிக்கை பொறுமையாக உயர்த்தி வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு 18 ரன்களில் 21 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ந்து 19 வது ஓவரில் மார்கரம் தலா ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க, ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
That's that from Match 28.
— IndianPremierLeague (@IPL) April 17, 2022
Aiden Markram finishes off things in style as @SunRisers win by 7 wickets.#TATAIPL #PBKSvSRH pic.twitter.com/njYoptmhFw
மார்கரம் 41 ரன்களுடனும், பூரன் 35 ரன்களுடனும் அவுட்டாகமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணி சார்பில் ராகுல் சாகர் 2 விக்கெட்களும், ரபடா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்