கோடியக்காடு அருகே சம்பள உயர்வு கோரி தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்
உப்பலி தொழிற்சங்க தலைவர் கனகசுந்தரம் தலைமையில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் தொழிற்சாலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டம்.
கோடியக்காடு அருகே உள்ள கெம்ப்ளாஸ்ட் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் ஒரு டன் உப்பு உற்பத்திக்கு 99 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர். தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஒரு டன் உப்பு உற்பத்தி செய்தால் 99 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு டன் உப்பிற்கு 150 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மராமத்து பணியில் ஈடுபடுபவர்களுக்கு 500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஊழியர்களின் படித்த வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உப்பலி தொழிற்சங்க தலைவர் கனகசுந்தரம் தலைமையில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் தொழிற்சாலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்