மேலும் அறிய
Advertisement
நாகை: ஒப்பந்தத்தில் எடுத்த டிராக்டரை திருப்பித் தராமல் மோசடி - ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
ஓராண்டுக்கு முன் மாதம் 27 ஆயிரம் ரூபாய் வாடகை பேசி டிராக்டர் மற்றும் டிப்பரை வழங்கியுள்ளார். இரண்டு மாத வாடகை தொகையாக 50,000 ரூபாய் முன்பணமாக வழங்கியுள்ளனர்.
நாகையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி ஒப்பந்தத்தில் எடுத்த டிராக்டரை உரிமையாளரிடம் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா தேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். விவசாய பணிகளுக்காக சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நாகை மாவட்டம் நிருத்தனமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், மகாதேவன் நாகூரை சேர்ந்த மகாதேவன், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு பேர் விழுப்புரம் நாகப்பட்டினம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ட்ராக்டர் தேவைப்படுவதாக சுரேஷ்குமாரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய சுரேஷ்குமார் கடந்த ஓராண்டுக்கு முன் மாதம் 27 ஆயிரம் ரூபாய் வாடகை பேசி டிராக்டர் மற்றும் டிப்பரை வழங்கியுள்ளார். இரண்டு மாத வாடகை தொகையாக 50,000 ரூபாய் முன்பணமாக வழங்கியுள்ளனர்.
அதன்பின் டிராக்டருக்கான வாடகை வழங்காமல் இழுத்து அடித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த சுரேஷ் டிராக்டரை திரும்ப வழங்குமாறு ரமேஷ் உள்ளிட்டடோரிடம் கூறியுள்ளார். ஆனால் டிராக்டரை வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் இதனால் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுரேஷ் குடும்பத்துடன் புகார் அளித்துள்ளார். புகார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுப் பகுதியில் சுரேஷ் அவரது சகோதரர் மனைவி குழந்தைகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த நாகூர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை யடுத்து உண்ணாவிரத்தை தற்காலிகமாக குடும்பத்தினர் கைவிட்டனர். மேலும் இது குறித்து காவல் கண்காணிப்பாளரை சந்திக்க சுரேஸ் குடும்பத்தினரை நாகூர் ஆய்வாளர்சிவராமன் அழைத்து சென்றார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion